தலைப்பு: பிறை நிலவாய் அவள் முகம்.
பங்கேற்பாளர்.
என் மனங்களில் துள்ளி குதிக்கும் வட்டநிலவு அவள்!
அதிகாலையில் பட்டாம் பூச்சிகளை என்னை சுற்றி பறக்கவிடும் சிவப்பு நிலா அவள்!
உழைக்கும்போது எந்தன் மனங்களில் உருவாகி
மகிழ்ச்சியை ஊட்டும் அழகு நிலவு அவள்!
பேசி பேசி என்னை மகிழச் செய்யும் என் மனம் கவர்ந்த நிலவு அவள்!
ஆறுதல் கூறி என்னை அணைத்துக் கொள்ளும் என் அன்னை நிலவு அவள்!
காதல் கூறாமல் என் கண்களை கலங்க வைக்கும் கண்ணீர் நிலவு அவள்!
நட்சத்திரங்கள் போல் பல நண்பர்கள் இருந்தும் எனக்கு ஒளி விளக்காய் திகழும் நிலவு அவள்!
பாசங்களை காட்டி என்னை உருகச் செய்யும் என் அன்பு நிலவு அவள்!
பிறை நிலவு போன்று என் வாழ்நாள் முழுக்க என்னை சிரிக்க வைக்கும் என் அன்பு உறவு அவள்!
பெயர்:இரா.வல்லரசு திருவரங்கம்
@lyarkaiyin Kaarigai @sapna
0 Comments