பிறை நிலவாய் அவள் முகம்

தலைப்பு: பிறை நிலவாய் அவள் முகம்.

மூன்றாமிடம்..


காரிருள் பொழுதினில்!! கலையான வீதியில்!!

தென்றல் வீசும் சோலை அருகே!!

ஏங்கிடும் இளமையின் தனிமையில்!!!

பொங்கிடும் நீர் ஊற்றாக நெஞ்சம் ஆர்ப்பரிக்க!!!

பொழிந்திடும் தூறல் மழையில்!!!

சாலையில் வழிந்திடும் 
நீர் குமிழிகளை!!

உரசியபடி செல்வது மின்னலோ!!!

இல்லை??? மின்னும் தேகத்தினை உடைய கன்னியோ!!!

முந்தி செல்லும் வாகனமென விரைந்து சென்று பார்க்கையில்!!!

இருளினை விலக்கிடும்

*பிறை நிலவாய் அவள் முகம்*

விழி அகலாத நிமிடங்களை அவள் முகம் தந்த முழுமதியினை!!!

எண்ணி எண்ணி காவியம் வடிப்பேன்!!!!
காதல் எனும் கானகத்தில் காத்திருப்பேன்!!!!

கனவினில் அவளை அழைத்து நெஞ்சம் தர மனு அளிப்பேன்......,.

நேரினில் வந்தால் காதல் மணமுடிப்பேன்...


இளையகவி மணிகண்டன் தண்டபானி
அரும்பராம்பட்டு.


@⁨Iyarkaiyin Kaarigai⁩ @sapna

0 Comments