என்னை சுமக்கும் காலணியே

பெயர் 
அன்பு❤️ மட்டும் 
      அருண்
மூன்றாமிடம்...

தலைப்பு 
என்னை காக்கும் காவலனே

நான் கால் பதிக்கும் இடமெல்லாம் 
பூ போல இருந்து என்னை தாங்கி நிற்கிறாயே 

நீ சிதை பட்டாலும் 
அடி பட்டாலும் 
என் பாதங்களை பாதுகாக்கிறாயே

ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

உன்னை மிதித்து துவைத்து துன் படுத்தினாலும் கூட
அத்தனையும் தாங்கி கொண்டு என்னை தாங்கி நிற்கிறாயே
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

கதிரவன் கண் பட்டு 
புழுதியெல்லாம் சுடும் போது
உன் மேனி முழுவதும் கொதிக்குதே
என் இதயம் முழுவதும் வலிக்குதே 
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

என் தாய் என்னை சுமந்து நடக்கையிலே
அவளையும் என்னையும் சேர்த்து நீ சுமக்கையிலே 
உன் குரல்விழி முழுவதும் இருகுதே
அதில் உன் மூச்சு காற்றும் விட மறுக்குதே 
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

என்னை சுமந்து நீ செல்லும் போது ஒத்த முள்ளு குத்துதுனு நெஞ்ச தூக்கி நிக்கிறியே 
என் நெஞ்சம் கொதிக்குதடா
உன்னை வாரி  அணைக்க துடிக்குதடா
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

காடு மேடெல்லாம் நான்  நடக்கையிலே கல்லும் முள்ளும் உன்னை குத்தி கிழிக்கையிலே 
உன் உடல் முழுவதும் சிதறுதே அதை  கண்டு என் உள்ளம் பதறுதே 
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

வெளியில் நான் செல்ல செல்ல  என்னை தொடர்கிறாய் 
உன் பாசத்தை எனக்கு பகிர்ந்து தருகிறாய் 
உன்னை உள்ளே அழைக்க என் மனம்  தயங்குவது ஏனோ  வெளியே விட மனமின்றி துடித்திட தானோ
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

பாசாத்தை பங்கு போடும் பாசா காரனே
நான் வேஷம் போட்டாலும் என்னை மீண்டும் மீண்டும் 
தாங்கி நிற்க்கிறாயே
உன் பாசத்தை நான் என்ன சொல்ல 
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழுத எனக்கு தெரியலியே 

தெரிந்தால் சொல்லி விடு உன்னை மட்டுமல்ல உன் அன்பையும் நான் நேசித்து வாசிக்கிறேன்
ஏ காலணியே உன்னை பற்றி கவி எழத எனக்கும் தெரியும் என்று

@⁨Iyarkaiyin kaarigai💙⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments