பெயர் :- 
கவியாரணி சா.கிருஷாந்தி 

தலைப்பு :-
என்னை சுமக்கும் காலணியே



 காலணியே!!
எங்கும் என்னோடு வருகிறாய் 
எத்தனை சுமை தந்தாலும் 
ஏற்று கொள்கிறாய்

விலை கொடுத்து வாங்கிய 
உன்னை ஒரு நாள் 
விட்டுவிடத்தான் போகிறேன் 
இருந்தும் விட்டு சென்ற 
இடத்திலே மீண்டும் 
என் வருகைக்காக 
காத்திருக்கிறாயே!!

ஒருவேளை என் மீது 
ஒருதலை காதல் கொள்கிறாயோ!!

எனை சுமையாய் இன்றி சுகமாய் சுமப்பதிலே அதை 
காட்டுகிறாயோ!!

பாதை வழி கல்லினதும் 
முள்ளினதும் காமத்தை 
உன் காதல் கொண்டு 
எனை அடைந்து விடாமல் 
நீயே தடுத்து கொள்கிறாய் 

நீ மட்டும் அறிந்த வகையில் 
பாதங்களோடு முத்தம் பதிக்கிறாய் 

என்ன இது காவல் விளையாட்டா 
இல்லை காதல் விளையாட்டா 
விளையாடுகிறாய் 

தனிமையின் பொழுதில் உனை பார்க்கையில் 
உன் ஏக்கங்கள் நானறிகிறேன் 
என் கொலுசு மணி 
உன்னை உரசி விடாதா 
எனதானே தவிக்கிறாய்!!

உன் இடம் எதுவென 
தெரிந்து அத்துடனே 
உன் காதலையும் முடித்து கொள்கிறாய் 

எனை சுமப்பதையே 
உன் காதல் கடமையாக்கி கொள்கிறாய்

கவலை வேண்டாம் என் மனதில் 
உனக்கும் இடமுண்டு 

காதலனாய் இல்லாவிட்டாலும் 
கடமை  தவறாத காவலனாய் 

இந்த கவிதையிலாவது 
உனக்கான என் நன்றிக்கடன் 
தீரட்டும்...



Insta id :- krish_ ashiq

@⁨+91 77085 86804⁩ 
@⁨Iyarkaiyin kaarigai💙⁩