இயற்கையின் காரிகை
இரண்டாமிடம்
தலைப்பு:
*பிறை நிலவாய் அவன் முகம்....*
காணும்போதெல்லாம்
கண்களில் தொற்றி கொண்டு
இதயம் வரை சென்றடைகிறானே...
அவனின் புன்னகை தான் எங்கும்
அலங்கரிக்கிறதே வானத்தின்
நட்சத்திரங்களாய்....
அவன் பார்வை வெளிச்சத்தில் தானே
என் உலகு(வாழ்வு)ம் ஒளி பெறுகிறது.....
இரவின் தனலாய் அவன் அன்பில் தானே நானும் கண்கள் மூடி
கனவு காண்கிறேன்...
அந்த கனவிலும் அவன் முகம் தானே
சில முறை வளர் பிறையாய்
சில முறை தேய் பிறையாய்
என கண்ணில் கண்ணீராய்...
அவன் வேதனை எல்லாம் என்னுள் மழையாய் பொழிய..
என் நிலம் வருகிறானே...
வந்து அவன் சோகம் களைகிறானே...
மீண்டும் வானில் சேர்கிறானே..
சில நேரம் விடுப்பெடுத்து
அமாவாசை என்ற இருளில்
என்னை தள்ளி...
பிரிவின் வலியும் தருகிறானே...
மனம் தாங்கவில்லை
இருந்தும்
அவனை வெறுக்கவும் முடிவதில்லை....
பகலெல்லாம் அவனை பிரிந்து
இரவு நிச்சயம் என்னில் சேர்வான்
என்ற நம்பிக்கை கொண்டு
தான் காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்....
நம்பிக்கை இழந்திட மாட்டேன் ..
அவனை பிரிந்திடவும் மாட்டேன் ..
0 Comments