பெயர் :-
கவியாரணி சா.கிருஷாந்தி
மூன்றாம் இடம்
தலைப்பு :-
காம பசியும் குப்பை தொட்டியும்
இருவரின் இணைப்பில் பூத்த ஆசை மலர் போல துளிர் விட
பிறந்து வந்து
வாழும் வாழ்வை எத்தனை கனாக்கள் வைத்து படைத்து இருந்தானோ அந்த இறைவன்
ஆனால் ஆசைகள் கொண்டு இல்லை இல்லை
பேராசை தீயில் காம பசி ஆற்ற போதையில் இருவரும் என்னவென்று அறியாமல் கொண்ட மோகத்தில் இன்பம் இறுதி பெற
பிறந்தது பச்சிளம் சிசு
தந்தவன் எங்கோ தேடி கிடைப்பானோ
பெற்றவள் எங்கோ பைத்தியம் கொண்டாளோ
சிரிக்க மட்டும் தெரிந்த சிசுவை குப்பை தொட்டி வாரிசு ஆக்கி வேடிக்கை பார்க்க எவர் தந்த அனுமதி
காமம் தந்த இன்பத்தில் திளைத்து
சலனமற்ற ஜீவனை துன்பத்தில் தள்ளியது ஏனோ
வளர்ந்து படித்து பட்டம் பெற போவதில்லை அந்த குழந்தை
சீரழிய போவதை விட
பசியால் வயிறு வற்றி தொண்டை வறண்டு
கத்தி கதறியே சாவை அடையட்டும்
அதுதான் இறைவனின் இலக்கண பிழையில்
சரியான விடை...
Insta id :- krish_ashiq
@Kamu pillai Sis
@Keerthana Manimaran😻
0 Comments