பெயர் : மாதவன் கவிச்சிதறல்
படக்கவிதை தலைப்பு : பாலியல் தூக்கு
உலகம் போற்றும் பெண்மைக்கு ஏனோ கலங்கம்,
தக்க தண்டனை கொடுக்காவிடில் எப்படி தவறிழைத்தவனுக்கு விளங்கும்..?
காமுகன் வீசும் வலையில் பெண்மையில் சிலர்,
தவறு என்றறிந்தும்
நீதித்துறையால் ஜாமீனில் பலர்...
விளக்கங்கள் பல சொன்னாலும்,
நீதியை நிலை நாட்ட முயன்றாலும்,
கள்வன் எவனென அறிந்தாலும்,
நிதியின் போக்கில் ஏனோ இன்று நீதி..!
காமம் தீர்க்க குழந்தை என்ன செய்வாள்?
ஒன்றுமறியா குழந்தையின் கதறல்,
உன் செவி எட்டவில்லையா,?
மகள் வயதில் அவள்,
மனம் கொதிக்கவில்லையா...?
தேகம் முழுக்க கீறல்கள்,
அவள் நித்திரை முழுக்க உலறல்கள்,
கால்கள் ஓயா உதறல்கள்,
கண்கள் மூடா இரவுகள்...
பருவம் எட்டா குழந்தைக்கும் நீ பாவம் கொடுப்பதேனோ?
பச்சிளம் குழந்தையின் வாழ்க்கை பாலைவனமாவதை,
உம் மனம் ஏற்குதா..??
மங்கையை தீண்டுகிறானா விருப்பமற்று..
தீயவனே அவன், தீர்ப்பு வேறு இல்லை...
தண்டனையை இயற்று,
மனிதம் நிலை நாட்டு
ஆண் பெண் வேறு இல்லை,
ஆதிக்கம் என்று எதுவுமில்லை..
உடனடி தண்டனை நியாயம் தனை காக்க
நிதர்சனம் ஏனோ ஏற்கும்...
#மாதவன் கவிச்சிதறல்..
@Arun
@Kamu pillai Sis
0 Comments