கோலோச்சி

பெயர் :- கவியாரணி சா. கிருஷாந்தி 

தலைப்பு :- கோலோச்சு ( செங்கோல் ஆட்சி )

இரண்டாம் இடம்

அரசன் எவ்வழியோ 
குடிகளும் அவ்வழியே!!

செங்கோல் ஆட்சியிலே செழிப்புற்றது இந்நாடே!!

மனம் போல் மணம் வீசியது 
மாதுளையும் மாம்பழ தோப்பும்!!

வார்த்தை போல் வளம் தந்தது 
வயல் வரப்பும் வாழை தோப்பும்!!

கருணையால் வாழ்க்கையின் கருமை நீங்க கரும்பாய் இனித்தது 
புலவர்களின் கவிகள்!!

சுமைகள் இறங்கவேதான் நீர்ச்சுனைகளின் ஆரவாரம் 
அருவிகளாய் ஆற்றங்கரையோரம்!!

எல்லாம் உன் மனம் போல்!!

பால்வார்த்தது நீர்த்துறைகளின் மீன்களும் 
பசியாற பசுக்களின் பெருக்கத்தால்!!

நீதி தவறாத செங்கோல் ஆட்சியில்!!

சிறு தவறு இல்லை நெஞ்சில் குற்றம் இல்லை!! 

கொலை இல்லை கொள்ளை இல்லை!!

களவு இல்லை கற்பு பறிபோகவில்லை!! 

அநியாயங்கள் இல்லை அநீதிகள் இல்லை!!

நேர்மையும் உண்மையும் இருந்ததெல்லாம் 
உன் செங்கோல் ஆட்சியில் தான்!!

உன் பாதை தவறவில்லை 
எம் பயணம் மாறவில்லை!!

நீ தடம் மாறவில்லை 
நாம் தடு மாறவில்லை!!

உன் இலக்கு நாங்கள் ஆக 
எங்கள் வெற்றி நீயாகிறாய்!!

அரசனே ஆண்டவனின் இணையோனே!!

உன் உறுதி கோல் ஆட்சியில் 
எங்கள் உரிமைகள் அடைகிறோம்!!

சிறக்க ஆட்சியில் 
பெற்றோம் உயர்வு!!

காலங்கள் அடிமை படுத்தினாலும் 
நாம் கலைகள் தான் 
உலகின் முதல் தலைகள்!!

எம்மையும் தமிழையும் 
உலகுக்கு தந்தாய் உயர்வாய்!!

உன் செங்கோல் ஆட்சியில்!!

மன்னனே!!...





Insta id :- krish_ashiq

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Sowbarnika Pratibha⁩

0 Comments