இயற்கையின் காரிகை...

இரண்டாமிடம்

காலணி....

கண்ணில் காணும் முள் ஒன்று
காலில் பாயாமல் பாதுகாக்க
காலணி இருக்கு...
புண் படாமல் நம்மை 
காக்கும் கவசம்..
மண் படும் தரையில் தவம் கிடக்கு...

அறுப்பட்டவணை தூக்கி எரியும் போதே...
ஏனோ அறுபடா மற்ற ஒருவனிற்கும் தண்டனை விதித்தான் மனிதன்...

கழட்டி விட்ட காதலி கூட காத்து நிற்பதில்லை நமக்கென..

கழட்டி விட்ட இடத்தில காவலாளியாய்
காலணி நமக்காக...

சேரை காலணியாய் அணிந்து விவசாயம் செய்யும் விவசாயியின் உணவு வீதியிலே...

காலிற்கு அடியே மிதிபடும் காலணி கண்ணாடி அறையிலே...

காய் கறி கூட விலை குறைவு தான்...

என்னை சுமக்கும் காலணி விலை உயர்வு தான்...

அளவு குறைந்தால் கடிப்பதும்...

அளவு அதிகமானால் தடுமாற செய்வதும்...

வருமானம் மட்டுமல்ல
காலணியும் தானே...


நாம் உதவியதை மறந்து 
கஷ்ட காலத்தில் விட்டு செல்லும்
உறவுகளை போல தான்...

நாமும் நம் காலணியை
கொஞ்சம் தேய்ந்ததும்
தூக்கி எரிகிறோம்...
நன்றி கெட்டவர்களாய்...


மொட்டை காலில் முள்ளு வெட்டி...

மூட்டை தூக்கி

அலங்கரித்தான் மகனின் கால்களை
அழகிய காலணி கொண்டு....

தன் வாழ்க்கை முடியும் வரை கால்நடை பயணம் மட்டுமே

காலணி இல்லா 
தந்தை குடும்பத்தின் சந்தோஷத்தை மட்டும்
நினைவில் கொண்டு....

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Arun⁩