இயற்கையின் காரிகை
முதலிடம்
தலைப்பு: நிறைவேறாத ஆசைகள்...
ஆசை ஆசை அது என்றும்
தீரா ஆசை...
என் மனம் விட்டு மாறா ஆசை...
எண்ணிலடங்கா ஆசைகளை
மறைத்து தானே வாழ்கிறோம்...
வருமையில்லா நாடுதனில் சுற்றி
எங்கும் பச்சை கம்பளம் போர்த்திய
விவசாய நிலங்களாக பூமியை அலங்கரித்திட ஆசை...
தூரம் வாழும் அவளை கொஞ்சம்
தொட்டு பார்த்து நெடுநாள்
அவளோடு பொழுதை கழித்திட ஆசை...
கொட்டும் மழைகளை சேமிக்கும் பஞ்சு
மெத்தை அதில் கொஞ்சம் உறங்கி
பார்த்திடவும் ஆசை....
பளீரென வெளிச்சம் தரும் கதிரவனை கொஞ்சம் மின்சாரம் இல்லா
வீட்டிற்கு பரிசளிக்க ஆசை...
சாதி இல்லா சமுதாயமாக
மக்கள் என்றும் ஒற்றுமை
உணர்வோடு சேர்ந்து வாழ்ந்திட ஆசை..
செயற்கை எல்லாம் மறைந்திட ஆசை.......
இயற்கை எல்லாம் நிறைந்திட ஆசை...
அன்னை இல்லா
பிள்ளை என இவ்வுலகில் யாரும் வாழாதிருக்க ஆசை...
ஏழைகள் என்றும்
பசி என்றும் பிரித்து பார்க்கும் மானிடம்
இல்லாதிருக்க ஆசை..
வானவில்லின் வண்ணமாய்
சில நேரம் மட்டும்
சோகம் என்பது தோன்றிட ஆசை...
வாசம் நிறைந்த பூவாய்
பாசம் உலகில் எங்கும் மலர ஆசை..
ஏமாற்றம் இல்லா மாற்றம் அமைய ஆசை...
கல்வி என்ற கடல் நீர்
இனிப்பு பானமாய் அனைவரும் ருசித்திட ஆசை..
ஏங்கி பிரிந்திடா உயிர்களும்..
போட்டியற்ற பாரதமும்
அமைந்திட தானே ஆசை.... ஆசை
அதீத ஆசை...
@Barathi Pratibha
@Kamu pillai Sis
0 Comments