காம பசியும் குப்பை தொட்டியும்

# காம பசியும் குப்பைத் தொட்டியும்
  - அஜித் கிருஷ்ணா

பங்கேற்பாளர்

மனிதன் மிருகமாகிறான்,
மனிதம் மிருகமாகிறது...
மிருகம் நடுரோட்டில் செய்வதை,
மனிதன் நடுவறையில் செய்கிறான்...
விஞ்ஞானம் எனும் போதையால்,
மெய்ஞானம் அழிவை நோக்குகிறது...
ஆணானவனின் மோகையால்,
பெண்ணானவள் துயரமடைகிறாள்....
நல்ல சிசுவை அழிப்பதும்,
பிறந்த குழந்தையை குப்பையிலுடுவதும்,
பெண்ணானவளின் தவறல்ல! ஆணுக்கும்,
அதில் சமபங்கு உண்டு...
களவானது திருமணத்திற்கு முன்பும்,
ஏன்? திருமணத்திற்கு பின்பும்!
பல இடங்களில் நடைபெறுகிறது...
கள்ளக்காதலுக்காய் பெற்றதை பலிக்கிறாள்,
பணத்தாசையால் மணந்தவளை கொல்கிறான்...
ஐந்தறிவே குடும்பமாய் வாழ்கிறது,
ஆறறிவு படைப்புகள் மிருகமாகிறது...
உங்களின் காம பசியால்,
எங்களை வதம் செய்யாதே...
பிறந்தால் குப்பையில் போடாதே...
நீங்கள் செய்த தவறுக்கு,
நாங்கள் பலியாக வேண்டுமா?
அற்ப பதற்களே!
எங்களின் வாழ்வை அளித்தவர்களே!
நீங்கள் நிம்மதி தொலைத்து,
வாழ்வாங்கு வாழ வேண்டும்....

@⁨Sowbarnika Pratibha⁩ @⁨Barathi Pratibha⁩ @⁨Kamu pillai Sis⁩

0 Comments