என்னை சுமக்கும் காலணியே

ம.சுதா கவி 
சிவகங்கை மாவட்டம்

தலைப்பு: 
*"என்னை சுமக்கும் காலணியே"*

ஆதியில் நாமும் வேட்டை செய்தோம்//

அங்கே நாமும் காலணி இன்றி//

காட்டில வாழும் விலங்காய் நாமும்//

கல்லும் முள்ளும் காணாது வாழ்ந்தோம்//

கடலின் ஓரம் நாகரீக காலம்//

மணலில் கால்கள் புதைத்த நேரம்//

காலணியாக சேற்றை பூசிய விவசாயி//

சந்தனம் என்றே வாழ்ந்தோம் அன்று//

நாம் முன்னோர் அணிந்த காலணியோ//

மரத்தின் துண்டில் ஓர் பங்காம்//

இயற்கை தந்த அந்த காலணியாம்//

இனிதே நன்மை செய்த காலணியாம்//

துணியால் தைத்த காலணி இங்கே//

பின்பே துரித நவீன காலணியாம்//

காலணி அணியும் மக்கள் பலவிதமாம்//

அதிலே தற்போது காலணி பலரகமாம்//

அக்காலம் ஆரோக்கிய சூழலே காலணி//

சாணம் தெளித்தே நற் கோலம்//

பச்சரிசி கோலத்திலே உயிரின் உணவு//

மாவிலை தோரணம் மஞ்சள் சூரணம்//

காலணி இன்றி வாழ்ந்த காலம்//

காலணி இன்றி கால் இல்லை//

படுக்கை தாண்டும் போதும் காலணி//

நோய் வந்திடுமோ என்ற பயத்திலே//

நொடி பொழுதும் காலணியை பிரியாது//

காலணியோடு இணைந்தே வாழும் காலம்//

நோய்களை தகரத்தே எந்தன் உயிரே//

அனையாய் காத்திடும் ஆதரவே காலணியே//

என் உடல் முழுவதுமே தாங்கிய//

உலகம் சுற்றி காட்டுகிறாய் நீ//

என்னை சுமக்கும் காலணியே நீ சுமையல்ல எனக்கு//

@ lyarkaiyin Kaarigai
@ Kamu Pillai

0 Comments