பங்கேற்பாளர்.
என்னவளே ...!
உன் நினைவுகளோடு தேயும் பிறையாய், தேய்கிறது என் உள்ளம்....!
கனநேரம் பொறுக்காத என் நெஞ்சம், உன் முகம் பார்க்க தவிக்கிறது ....!
விடியல் வர பல காலம் ஆகிடுமோ ....!
இல்லை விடிய மறுத்து இரவு ஆட்கொள்ளுமோ....!
என் பாவையின் குரல் கேட்க தவமிருக்கும் நெஞ்சம்...
இம்மீளியின் கண்ணீருக்கு இடம் கொடுப்பாயா தஞ்சம்....!
இத் தனிமையின் தவிப்போ, என் தாரத்திற்கு மட்டுமே....!
இக்கொடுமையின் கொதிப்போ,என் தூரிகைக்கு மட்டுமே ....!
பொல்லாத இந்நிலவும் ஏளனமாய் என்னைப்பார்த்து சிரிக்கிறது ..!
கொல்லாத உன் நினைவு மட்டும் அன்பாய் அழைக்கிறது ....!
விடியும் வரை முடியும் எனத் தோன்றவில்லை, ஆனால் விடியாத வரை ரணம் ,ரணமே....!
நினைவுகளுடன் கொஞ்சிப்பேசவே நித்திரையும் தோன்றியதோ....!
கனவுகளோடு கலந்தாடிடவே காதலும் பூத்ததோ ....!
நினைவுகள் எல்லாம் கனவாக வேண்டாம் ...!
கனவுகள் எல்லாம் நினைவாக வேண்டாம் ...!
நிஜமான உன் ஞாபகம் மட்டும் வேண்டும்.
தென்றலாய் நீ வீசிட ...!
தேன் இசையாய் நான் பாடிட ...!
இரவின் போதை மாறிட ...!
விடியல் பாதை தோன்றிட ...!
மௌனமாய் பல கதை சொல்லும் காவியமாய் ,
*பிறை நிலவாய் அவள்முகம்*
வலியின்தோழன்
ரா. ராஜ்குமார்
@ arun
@Kamu pillai
0 Comments