காம பசியும் குப்பை தொட்டியும்

பெயர்:  வி. ரூபாஸ்ரீ 

மூன்றாமிடம்

தலைப்பு :
🐾 காமபசியும்
குப்பை தொட்டியும்

🐾 அவளை பார்த்து நீ வியக்க !!

🐾 உன்னை பார்த்து அவள் ரசிக்க !!

🐾 காதல் என்னும் தீக்குச்சி கொண்டு !!

🐾 காமம் என்னும் தீப்பொறியை  கிளம்ப !!

🐾 இருவரின் உடலும் மனமும் ஒன்றாக உரசி !!

🐾 பற்ற வைத்தன காமம் என்னும் தீ பந்தத்தை !!

🐾 பற்ற வைத்த நெருப்பாய் 
கர்ப்பம் தரிக்க !! 

🐾 தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு !!

🐾 தண்டனை பச்சிளம் குழந்தைக்கு !!

🐾 தொப்புள் கொடி அறுத்த உடனே !!

🐾 சேயுடனான பந்தத்தையும் அறுத்து !!

🐾 எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல் !!

🐾 கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை !! 

🐾 குப்பைகளையே ஆடையாக்கி !!

🐾 குப்பை தொட்டிகளையே தொட்டிலாக்கி !!

🐾 உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி !!

🐾 கை விட்டு போகும் முன் அதன் கண்ணழகை பாரடி !!

🐾 குப்பை தொட்டியும் இன்று உயிரோடு புதைக்கும் !!

🐾 கல்லறையாக மாற்றிவிட்டனர் !!

🐾 அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டாம் !!

🐾 அநாதை இல்லத்திலாவது சேரடி !!

🐾 @ arun
🐾 @ kamu pillai

0 Comments