காம பசியும் குப்பை தொட்டியும்

காம பசியும் குப்பை தொட்டியும்...

கலை கவி

மூன்றாம் இடம்

என்னை சுமந்தாய் என் மகன் இன்று அல்ல, சுமை என்று..

பத்து மாதம் என்னை சுமை என்று நினைத்தாயே அன்று அந்த ஒரு நிமிடம் உன் சந்தோஷத்திற்கு இடம் கொடுக்க நினையாமல் இருந்திருந்தால் போதுமே,

இன்று நான் குப்பைக்கிடங்கில் நாய்களுக்கு இரையாகாமல் இருந்திருப்பேனே..

தெய்வ சாயலால் மண்ணில் வந்த என்னை
அழுக்கு ஆடைகளும் மனித கழிவுகளும் நிறைந்த கிடங்கில் வீசினாய்..

இதற்கு என்னை அனாதை இல்லத்தில் விட்டிருக்களாம் என்னை ஈன்று எடுக்கா விட்டாலும் எதேனும் மகராசி ஒருவாய் சோறு போட்டிருப்பாள்..

இப்படி அன்றி என்னை இன் நரகத்தில் பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் இரையாக்கி விட்டாயே..

குப்பையில் கிடந்தும் கூட நான் குழந்தை தான் 
ஆனால் உன் காம இச்சைகாக உன் கருவில் வளர்ந்த என்மீது எச்சை இலைகளை வீசி செல்கிறார்கள்..

எனக்கு அளித்த துரோகத்தின் நிலையா உனது சுமை ?...

காம பசிக்கு மட்டும் உடலை வளர்க்கும் நீயோ வெட்கமின்றி இம்மண்ணில் வாழ்கிறாய்..

ஆனால் எவ்வுயிர்க்கும் தீங்கு அளிக்காத நானோ என் உடலை பூச்சிகளுக்கும், நாய்களுக்கும் இரையாக்கி இம்மண்ணை விட்டு மறைகிறேன்...

என்னோடு நிறுத்திக் கொள் உன் உடல் பசிக்கு என்னை போன்ற பிஞ்சு உயிர்களை பலிக் கொடுப்பதை...!!!

                  கலைவாணி விஜய்
#kalaikavi

0 Comments