பெயர்: ரா.சீனிவாசன்
தலைப்பு: என்னை சுமக்கும் காலணியே
என்னை சுமக்கும் காலணியே
என் பாதத்தை நீயோ காக்கின்றாய் உன் உறவோ வீட்டின் வாசல் வரையிலே
ஒரு புறம் என்னை சுமக்கின்றாய் மறு புறம் அழுக்கை சுமக்கின்றாய்
இடையில் நீயோ தேய்கின்றாய்
இருப்பினும் என் பாதத்தை நீயோ காக்கின்றாய்
இப்படி கடுமையாய் உழைக்கும் உனக்கு
நான் கொடுக்கும் மதிப்போ குறைவு உன் சேவையோ எனக்கு நிறைவு
உன் இல்லாமையோ என் பாதத்திற்கு தொய்வு
எனவே உன்னிடம் ஒன்றை நான் கற்றேன்
பிறரின் மதிப்பை நீ மதிக்காதே உனக்கான மதிப்பை உழைத்து உருவாக்கு
உன் பிரிவால் பலரை பரிவாக்கு.
---ரா.சீனிவாசன்
@Kamu pillai Sis
@Iyarkaiyin kaarigai💙
0 Comments