காம பசியும் குப்பை தொட்டியும்

ம.சுதா கவி
சிவகங்கை மாவட்டம்

முதலிடம்

தலைப்பு : *காமப் பசியும் குப்பைத் தொட்டியும்*

தேவைக்கும் ஆசைக்குமாய் 
தேவையில்லா காமச் செயலுமாய் !பாவையரும்‌ பாவியருமாய் 
அர்ப்பப் பதரும் ஆண்மை சிலருமாய் வாழ்ந்த நேரங்கள் !

அனுபவித்த துச்சமான
கொச்சை செயலின் மிச்சமாய் நின்றதே பச்சிளம் குழந்தைகள் !
தூர தூக்கி எரியப்பட்ட
அரும்பு மலர்கள் பிரித்து                      எரிந்த மாலையாய் ஆனதே !

துரத்தப்பட வேண்டிய                                சண்டாள ஜென்மங்கள்
அனுகூலமாய் இருக்கையிலே !அனாதைஉள்ளங் களாய் ஆசை பிஞ்சு நெஞ்சங் களாய்‌                                  குப்பைத் தொட்டியிலும் 
தெருவின் ஓரமுமாய் ! 

கதறியே அழுதபடி கண்ணீர் பந்தலிலே உறக்கம் இன்றி           பசி கிரக்கத்தால் வாடியதே !
பால் மணம் மாறாத பிஞ்சு குழந்தைகள் பல !

பாவமென்று கூறும் மக்கள் கடந்து செல்லும் வீதியிலே பதராய் போன மாக்கள் ஆனாரே !வெறும்வாயிலே வார்த்தையால் கருணை செய்யும் நயவஞ்சகர்கள் மத்தியிலே ! 

ஐந்தே அறிவு படைத்தே இறைவா அதில் ஒன்றாய் நாய் கூட குப்பைக் குழந்தையை அறிவாய் காத்து இனிதே வளர்த்து மனிதனாய் மாற்றியதே !

இந்த கலியுக காலத்திலே அத்தகு  அறிவான உயிரையும் படைத்தே இறைவா அக் குழந்தைகள் பலவற்றிலே ஒருசில பிழைத்ததே ! 

மானிட பதர்கள் இடையே அற்புத ஐந்து அறிவு உயிர்களாய் ஆயிரம் காலமாய் வாழ வேண்டும் அந்த  புனிதங்கள் அதிசய பந்தங்கள் !

குப்பைத் தொட்டியில் தீமை எண்ணங்களை எரியுங்கள் அந்த எண்ணங்களோடே உங்கள் வஞ்சகம் தொலையுங்கள் !

காமத்தின் ஆசையாலே 
அழகிய முத்தை எடுத்தே குப்பையிலே எரிந்து பிஞ்சின் அழுகையில் அழிந்து விடாதீர்கள் !

குப்பையிலே எரியப்படுகின்ற குழந்தைகள் தீவிரவாத எண்ணத்தோடு நஞ்சு மனதனாய் ; எதிரியாய் வளருவதும்‌ ! 

நற் சிந்தனைகள் மனதே விளைவதும் சமூகத்தின் மத்தியிலே எத்தனை தடைகள் தாண்டிய அக்குழந்தை களின்                               நரக வாழ்க்கை !

ஆண்களின் காமத்திற்கும் 
பெண்களின் மோகத்திற்கும்
பிறந்த பாவத்தாலே பிஞ்சு குழந்தை களின் நஞ்சாய்               போனதே அப்பாவி வாழ்க்கை ! 

இந்த தேசத்திலே ஓடுகின்ற பற்பல பிரச்சினையிலே இதுவும்‌ ஒன்றென்று கருதவேண்டாம் !
தீவிரவாத எண்ணம் ஒரு நாட்டையே புரட்டிப் போட்டுவிடும் !

குப்பையிலே எரியப்படும் குழந்தைகள் முத்துக்களாய் ஆவதும் பதிர்களாய் எதிர் நாடு சென்றே எதிர்ப்பாவதும் 
மக்கள் செயல்களிலே உள்ளது !

காமப் பசி துறந்தே 
குப்பைத் தொட்டியில் நிரம்பும் குழந்தைகள் நம் வீட்டில் தவழும் தங்ககங்கள் ஆகட்டும் !

@Arun
@Kamu Pillai

0 Comments