அஜித் கிருஷ்ணா
பங்கேற்பாளர்
# நிறைவேறாத ஆசைகள்
உயிரியின் மீது வருவதுதான் காதலா?
ஏன் பொருளின் மீது வந்தால்!
ஆசையே காதல்... காதலே விருப்பம்...
சிறுவயதில் ராணுவ வீரராக ஆசை,
உடல் பழுதால் கடந்தது...
பள்ளியில் கட்டிட பொறியாளராக ஆசை,
மன பயத்தால் கரைந்தது...
கல்லூரியில் கணினி வல்லுநராக ஆசை,
முயற்சி செய்யாததால் மடிந்தது...
இவ்வயதில் விளையாட்டில் சாதிக்க ஆசை,
வேலை பளுவினால் பொய்த்தது...
தமிழ் மொழியால் கவியெழுத ஆசை,
மக்கள் நலனால் அரசியலானாக ஆசை,
அன்னம் பகிர்வதால் உழவனாக ஆசை,
மழலை செல்வங்களால் ஆசிரியராக ஆசை,
பழமையின் மோகத்தால் ஆய்வாளராக ஆசை...
தீரா காதல் காண கண்டேனே!
அதை தேடி நானும் சென்றேனே!
மனம் காதலித்து, உடல் மறுத்தது...
நிறைவேறா ஆசையானது...
@Barathi Pratibha @Kamu pillai Sis
0 Comments