மாதவன் கவிச்சிதறல்
காம பசியும்
குப்பை தொட்டியும்
முதலிடம்
_$$$$$$$_
தெருவெங்கும் குப்பை தொட்டி,
குப்பையை போட என நம் எண்ணங்கள் நினைக்க,
குழந்தைகளையும் இட தான் போல..
குப்பை தொட்டி வைக்க பட்டது என்னவோ குப்பைக்கு தான்,
மனிதம் அழிந்து மானம் கெட்ட சிலரால்,
உலகறியா சிசுவும்,
உவமை அறியா என் வரிகளுக்கு உயிர் கொடுக்கிறது இத்தலைப்பிற்கு...
மனிதம் மறுத்து போய்,
மானிடம் வெறுத்து போய்,
நிதர்சனமும் நிலை குலைந்து,
நேர்மறை தனை இழந்து,
காமம் தலைக்கேறி,
தன்னலம் தான் மறந்து,
தருதலை என இருந்து,
கரு இங்கே உரு பெற்று,
கல்லறை அமைக்கிறது.. அது இக்குப்பை தொட்டி தானா..?
ஆணின் இச்சைக்கும்,
பெண்ணின் இச்சைக்கும்
உயிர் பிச்சையாய்
உரு கொடுத்த உயிர் குப்பை மேட்டில் இன்று,
கேட்பாரற்று..
காமம் போக்க வழிகள் நூறு,
அதற்கு பெயரோ இங்கு வேறு,
பிறகு, எதற்காக இலக்கணம் தேடுகிறீர் இச்சிசு மூலம் ?
தினசரி செய்திகள்,
தீராது வலம் நம்மில்,
திமிரெடுத்த சில மிருகங்களின் வேட்டைக்கு
உணவாக இந்த உயிர்கள்..
வேகம்பெற்ற விந்து நுழைந்து,
கழகம் பெற்ற கருப்பையையடைந்து,
இணைந்து அழகிய உரு மெருகி,
தினமும் வலி பல கடந்து
திங்கள் பத்து தான் சுமந்து,
ஈன்ற குழந்தை எப்படி குப்பையிலே..?
ஈன பிறவிகளின் காமம் ஈடேற இது தான் விடையோ..??
பெண்ணியம் பெயருக்குதானா இவளிடம்,
ஆண்மகனின் ஆண்மை இதுதானா இவனிடம்..?
வரிசை கட்டிய வினா வரிகளுக்கு
விடைகளை வினவாதே..
இனியேனும் மாறட்டும், மாற்றட்டும் நமது வரிகள் வாழ்வியலாக...
-மாதவன் கவிச்சிதறல்..
@Arun
@Kamu pillai Sis
0 Comments