மு. வள்ளிமுத்துமாலை
பங்கேற்பாளர்
தலைப்பு :அவளும் ஆசைகளும்
அக்கதம் தூவி ஆசிர்வதிக்க
அக்களிப்போடு
ஆயிரமாயிரம் ஆசைகளோடும் கனவுகளுடனும் அடியெடுத்து வைத்தாள் அவள்
புகுந்த வீட்டில் புது புது உறவுகளை புரிந்துகொள்ளப் போராடினாள் அவள்
அதிகாலை எழுந்து அடுப்பங்கரைக்குள்ளே ஐக்கியமானவள்
கட்டியவன் கை பிடித்து கடைவீதி போக நினைத்தாள் அவள்
வேலைக்கு செல்லும் கணவனுக்கு வேண்டியதை செய்தாள் அவள்
மதிய உணவு வேளையிலே அவனிடமிருந்து அழைப்பு வரக் காத்திருந்தாள் அவள்
வேலை முடிந்து வீடுத்திரும்பும் கணவன்
மல்லிகைப்பூ வாங்கிவர ஏக்கம் கொண்டாள் அவள்
கருவறையில் ஓர் உயிரை சுமக்கக் கனவு கண்டாள் அவள்
பத்துமாதம் பத்திரமாகக் கருவறையில் பாதுக்காத்தாள் அவள்
வலிகளை எல்லாம் தாங்கி குழந்தைகளை வளர்த்தாள் அவள்
பெற்றப் பிள்ளைக்காக எதையும் செய்ய துணிந்தவள் அவள்
பிள்ளையின் காதலுக்காக கணவனிடம் மன்றாடுப்பவள் அவள்
தள்ளாடும் வயதானாலும் தனக்காக வாழாதவள்
எனக்கு என்று வாய்விட்டு கேட்காதவள்
அவள் ஒழித்து வைக்கும் காசானாலும்
சேர்த்து வைக்கும் நகையானாலும்
வாங்கும் கடன்களேயானாலும்
என்றுமே அவளுக்காக இருந்தது இல்லை
அவளது ஆசைகளை நிறைவேற்ற ஆயிரம் உறவுகள் உடன் இருந்தாலும்
வாய்விட்டு சொல்லா ஊமையானவள் அவள்
இருந்துமில்லாமல் இருக்கும் கானல் நீராக
அவளது ஆசைகளும் கனவுகளும் ...
🙏
#barathi baski
#kamupillai
0 Comments