நிறைவேறா ஆசைகள்

ம.சுதா கவி
சிவகங்கை மாவட்டம்

மூன்றாம் இடம்

தலைப்பு : *நிறைவேறா ஆசைகள்*
(கற்பனை ஆசைகள்)

மலர் இதழில் பனித்துளி குளியளிட்டு தேனமுது உண்டு பசுமை துயில் கொள்ள ஆசை...! 

சிப்பிக்குள்ளே கடற் பெட்டிக்குள் முத்தாய் பிறந்து கயல் மாலை தொடுக்க ஆசை...!

மேகம் பிழிந்து கரு விழிக்கு மையிட்டு வெண் நிலவு வர்ணம் கொட்டி முலாம் பூச ஆசை...!

சூரியக் காற்றை வெட்டி பனிக் கூலாய் ஒட்டி புவியை அழகாக்க ஆசை...!

சிதறிய விண்மீன்களை சீரிய வரிசை செய்தே சிந்தனை ஒளி வீச ஆசை...!

பறவை சிறகை வாங்கி மூவுலகை சுற்றிடும் தென்றல் ஆசை...!

கவியாலே புவி அளந்து ! 
தமிழாலே கடல் நிரப்பி ! இசையாலே வான் பரப்பி ! 
சுவையாலே பாட்டிசைக்கும் 
பரந்த ஆசைகள்...!

தேடல்கள் போல் நிறைவேறாது தொடரும் கற்பனை கனவுகளாய் !!!

@ Barathi Baski 
@ Kamu Pillai

0 Comments