பிறை நிலவாய் அவள் முகம்

ம.சுதா கவி 
சிவகங்கை மாவட்டம்

முதலிடம்

தலைப்பு: *பிறை நிலவாய் அவள் முகம்*

நெடுநீல சரிகை
அதிலோர் காரிகை

அழகிய மேனகை
நிலவாய் மலருதே 

செவ்வானக் கடலிலே 
செந்தூர மலராய் 

சலவை இதழாய் 
ஞாயிறு உதிருதே !

பசுமை விரிப்பே
பாரினில் துடிப்பே

பகலவன்‌ வருவான் 
பாதியில் பூத்தாய்

கண்ணிலே விழுந்தே 
இமையாய் எழுந்தாய்

காரிருள் கலைத்த 
கடவுளின் அம்சமே !

இனிமை சிறகாய் 
தனிமை இறகாய் 

வானில் திரியும்
தேவதை பறவையே 

தேனிசை பாடியே 
செவியை ஆளுகின்ற

சந்தமும் நீயானாய்
சாகாத வரமே !

கர்ஜனை செய்தே 
சீற்றம் தந்தாய்

மீசையை முருக்கிய
மீட்சி யின் அரசனே

கூர்மை உன்னிலே 
கோர்வை செய்யுதே 

பார்வை போதுமே 
அச்சம் சூழந்திடுமே !

புயலாய் சூழலும்‌ 
புதிரும் நீயானாய் 

சுனாமியின் சுவராய்
எங்களை எடுத்தாய் 

தென்றல் கோதிடும்
கைகளும் நீதானே 

மீனவ மக்களுக்கு
ஆதரவு கொடுத்தாய் !

விண்ணின் எரிக்கல்
மர்மத்தின் ஒலிக்கல்

இரண்டிலும் நீயே 
நர்த்தனம் செய்வாய்

இசையாய் ஆடுகின்ற
விசையும் நீதானே

நலினம்‌ பாடுகின்ற 
கலையும் நீதானே !

இறையொளி ஆசியும் 
கங்கையின் புனிதமும் 

காவியத்தின்‌ மொழியும்
கலந்தவள் நீதானே 

இயற்கையே உந்தன் 
இளமையின் முகமாய் 

பிறை நிலவின்‌ 
வடிவாய் கண்டேனே !

பிறை நிலவாய்
இயற்கையவள் 

முகம் எந்தன் 
மனதிலே ஒளியானதே !

@ Arun 
@ Kamu Pillai

0 Comments