அனிஷ். வீ
காலணி வாழ்க்கை
✨யாவரும் போல் கருவில் தான் நான் பிறந்தேன்,
✨வயது வரும் வரை தெரியவில்லை நான் சமூகத்தால் மிதிக்க படுவேன் என்று,
✨இறைவனால் பிழையாக்கப்பட்ட கவிதையா நான்?
✨என்னை பெற்றவரும் குப்பையில் வீச,
வாழ வேண்டி சமூகத்தை நாடி வந்தேன்.
✨விசித்திர மிருகமாய் சமூகத்தில் நான்,
✨ ஏனோ யாவராலும் ஒதுக்கப்பட்டேன்.
என்னை நானே அறிந்துகொள்ள முடியாத வயதில்
சமூகம் திருநங்கை என்னும் முத்திரை குத்தி, கண்ணாடி மீது கல்லாக என்னை மீண்டும் மீண்டும் உடைத்தனர்.
✨சாலைகளில் சென்றால் கேளி கிண்டலின் களஞ்சியமாய் நான்!
✨பசித்த வயிறுக்கு ஆறுதலே உணவானது,
சமூகம் என்னை காலணியாக, நான் போகும் இடமெல்லாம் மிதித்து மிதித்து நடக்கிறதே!
✨பசி தீர்க்க வேலை தேடி நான் போனால் தீட்டு பட்ட பொருள் போல,
என்னை துரத்தினர்.
✨சமூகமே! நீ என்னை காலணியாக மிதிக்க பார்க்கிறாய்,
இனியும் மிதிக்க பார்க்காதே!
✨நாங்களும் ஓர் உயிர் என்பதை மறவாதே!
காலணி அல்ல நான் !உனக்கு கீழ் மிதிப்பட
யாவரும் சமம் என நினைப்போம்!
மனிதத்தை மதிப்போம்!.......
-அனிஷ்.வீ
ஊர் :கூடுவாஞ்சேரி
Insta id : isai _ezhilan
@Iyarkaiyin kaarigai💙
@Sowbarnika Pratibha
0 Comments