பெயர் : ஜெயந்தி. G.D.
முதலிடம்
தலைப்பு : பாலியல் தூக்கு
பால் மண(ன)ம் மாறா பச்சிளம் பிஞ்சுகள்
பாழ்பட்டு சீர்குலைந்த பாலியல் அவலங்கள்
கண்டு பொறுக்குதில்லை மானிட உள்ளங்கள்
என்று விடியும் இச்சூரிய கிரகணங்கள்!?
காமவெறி உன் கண்ணை மறைக்க
போதையேறி உன் மதியை மயக்க
பிறப்புறுப்பின் தினவை தணிக்க
மதயானையெனவே வாழ்வை அழிக்க!
அணைத்த அவயங்கள் அனலென தகிக்க
கீறலிட்ட தேகம் உலைநீரென கொதிக்க
மழலையின் பூமேனி பற்றித்தான்
எரிய
பாவமடா என் சிசுவது… விட்டுவிடு விலகிவிடு!!
மலரா மொட்டுகளை மலரும் முன் பொசுக்கினாய்
வண்ணத்துப்பூச்சியை கூட்டுப்பழுவாய் கசக்கினாய்
குயிலொன்று பாடும் முன் குரல்வளையை நெறித்தாய்
இளஞ்சிங்கமொன்றை குருளையெனவே நீ கொன்று புதைத்தாய்!
உனை மிருகமென்றால் ஐந்தறிவும் வெட்கி தூக்கில் தொங்கும்
மனித அரக்கனே உனை அசுரவதம் செய்வோம்
சூரனை தீக்கிரையாக்கி சூரசம்ஹாரம் நிகழ்த்துவோம்
நரகாசுரன் நீ அழியும் நாளே எம்மகவுகளின் மெய்(உடல்) தீப ஒளி!!
@Arun @Kamu pillai Sis
0 Comments