நிறைவேறா ஆசைகள்

தலைப்பு; *நிறைவேறாத ஆசை*

பங்கேற்பாளர்

சிறுவயதில் வளமான வாழ்வு/

பள்ளியில் முதல் நிலை தேர்வு/

கல்லூரி தோழி என்றொருத்தி இல்லாத நிலை/

காதல் தோல்வியில் கவி வடிக்கும் வாய்ப்பு/

ஆசிரியனாக பட்டம் பெற்றும் பாடம் எடுக்க முடியாத சூழல்/

காதலி மனைவியான பின் காதலிக்க நேரமில்லாத வாழ்க்கை/

முதல் குழந்தை பெண்ணாக பிறக்க நினைத்த நெஞ்சம்/

இரண்டாமவனும் ஆணான சலிப்பு/

தமிழ் தேசம் வேண்டிய
நெடுநாள் தாகம்//

தமிழ் கூறும் நல்லுலகை 
படைக்க நினைக்கும் எண்ணம்/

அண்டம் ஆண்ட இனம் 
அடிமை வாழ்வை விடுத்து மீண்டெழும் கனவு//

அத்தணையும் எம் நிறைவேறாத ஆசை என்றாலும்?????

தரணி ஆளும் தமிழ் இனம்.... இது நிறைவேற போகும் ஆசை.......


இளையகவி மணிகண்டன் தண்டபானி
அரும்பராம்பட்டு.

படவரி முகவரி: Mani_yaso666

@⁨பாரதி பாஸ்கி கவிஞர் நன்பர்⁩ @sapna@kamu pillai

0 Comments