ஆர் ஜே சாரா
இலங்கை
தலைப்பு:என்னை சுமக்கும் பாதணியே
பங்கேற்பாளர்
என்னை தாங்கும் இதயம் நீயே
எப்போதும் யாருமே பெருசா நினைக்கா பாதணிகளே
எப்போதும் கூடவே பிறந்து கூடவே ஒதுக்கப்படும் ஒரு பொருளானாயே
ஈருடல் ஓருயிர் போல்
பாதணியே நீ ஒன்றாய் இருந்து ஒன்றாய்
அருந்தால் உயிர் வாழ முடியாது இரண்டுக்கும் தண்டனை கொடுக்கும் நியாயமற்ற உலகமே
எப்போதுமே கூடவே இருப்பது நம் உறவுகளை விட கண்ணீரிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாமாய் பாதணி நீ தான்
நம் உடன் இருக்கும் இதனை எப்போதும் மக்கள் நன்றி இல்லாமலே தான் பார்ப்பார்கள்
கரடுமுரடான பாதை கடந்து சேறு ஏதும் நம்மை தீண்டாமல் பாதுகாக்கும் பாதணியே
கோயிலுக்குள் போடாமல் போவது என்னவோ குற்றம் செய்த கைதியைப் போல வாசல்படியே கழற்றிவிட்டு உள்ளே செல்வார்களே
மனிதனே உன் கூடவே இருக்கும் இந்தப் பாதணி உனக்கு என்ன குற்றம் செய்தது சொல்
ஒரு தீண்டக்கூடாத பொருளாக ஏன் இப்படி ஓர் அநீதி
வேண்டாம் உன்னை எதுவும் நோய் நொடி வராமல் பாதுகாக்கும் உன் அன்னையை போன்று அல்லவா
உன் கால்களுக்கு கீழ் உன்னை தாங்கிக் கொண்டிருக்கிறது இதயம் உடைய பாதணி
உன் அன்னை அன்பிலும் மிஞ்சிய பாசம் கொண்ட தல்லவா இந்த பாதணி
சற்று சிந்தித்துப் பார் கோயிலுக்கு வெளியே இருந்து பாதணி பேசியது ஒருநாள் நான் அந்த கடவுளிடம் கேட்க வேண்டும் ஒரு கேள்வி
பேச ஆரம்பிக்குது என்னை மனித காலுக்கு கீழ் இருக்கும் ஒரு பாதணியாக படைத்தாய் கடவுளே ஏன்
கடவுள் பதில் சொன்னான் கண்ணும் கருத்துமாய் வளர்த்த அந்தப் பெற்றோரை ஒரு வயதுக்கு மேல்
முதியோர் இல்லங்களில் சேர்க்கும் மனிதர்கள் உன்னை மட்டும் கூடவே எப்போதும் வைத்திருப்பார்களா ?
உன் தேவை முடிந்ததும் தூக்கி எறியத்தான் செய்வார்கள் இது மனித குணம் மிதி படுகிறோம் என்று தெரிந்தும்
அந்த மனிதனைப் பாதுகாப்பது உன் குணம் மனிதனுக்கும் உனக்கும் இருப்பது இதுவே
உதவியை மறந்து விடுவான் ஆனால் நீ மனிதனுக்கு உதவி செய்வதற்காகவே பிறந்ததவன் அல்லவா
நீ இன்றி நான் இல்லை மனித இனத்தை பாதுகாக்க உன்னை போல் வேறு யாரும் இல்லை
பாதணி சொன்னது ஒரு நாள் இந்த உலகில் நான் மனிதனாகவும் என்னைப் மிதித்த அந்த மனிதன் எனக்கு பாதணியாக பிறக்க வேண்டும்
அப்போதாவது அவன் உணர்வான் நான் எத்தனை தடைகளை தாண்டி அவனை சுமந்தேன் என்று புரிந்துகொள்வான்
மனிதனே சுமக்கும் சுமை தாங்கியாக நான்
@Abinesh
@Sifa serin
0 Comments