கோலோச்சி

*-☘️பெயர் : ரூபாஸ்ரீ 
*-☘️தலைப்பு :கோலோச்சி 

இரண்டாம் இடம்

*-☘️மூலமொழிக்கெல்லாம் மூலமொழி யானவளே..!! 

*-☘️கோல மதுரையிலே கோலோச்சி வாழ்ந்தவளே..!!

*-☘️எத்துணையும் இல்லாமல் இத்தரையில் இன்றுவரை..!!

*-☘️தத்திநடக் காமல் தனித்து நடப்பவளே..!! 

*-☘️கோலோச்சி நின்றவளை
வாளொச்சி வென்றாரில்லை..!!

*-☘️வானோங்கி நின்றபுகழ் 
வளர்ந்தோங்கி நின்றவிடம்..!!

-*☘️நீ கோலோச்சிய சில நொடி நேரத்திலே எதிரிக்கு 
பற்றிக் கொண்ட பயம்..!!

*-☘️கீழே விழுந்தாலும் சருகல்ல நான் சாவதற்கு..!!

*-☘️என்று கூறி வீறுகொண்டு எழுந்து தாக்கத் தயாராகிறாய்..!!

*-☘️தலை நிமிர்ந்து நில் எதிர்த்து நின்ற எதிரியும் எழுந்து நின்று கை கொடுப்பான்..!!

*-☘️கனல் தெறிக்கும் வரிகளில் அதிகாரக் கோலோச்சி..!!

*-☘️ஆணவத் தேரேறி ஒடுக்கப் பார்க்கும் எதிரிகள்..!!

*-☘️உன்னை கடந்து சென்ற கயவனும் கை தட்டி ஆர்பரிப்பான்..!! 

*-☘️எட்டுத்திக்கும் உன் பெயர் ஒலிக்கும்..!!

*-☘️அன்னைத் தமிழ்மொழி புகலக் கண்டேன்..!!

0 Comments