பெயர் : ஜெயந்தி. G.D.
தலைப்பு : கோலோச்சு
மூன்றாம் இடம்
முருகு கையிடை வேல் போல்!
அம்மன்/சிவம் கையிடை சூலம் போல்!
எம் கோ கையிடை செங்கோல்!!
மணிமுடியும், வெண்கொற்றக்குடையும், கொட்டும்முரசும், செவ்விய செங்கோலும் மன்னர்க்கழகாம்!!
பற்றிய நேரிய தண்டது காக்கும்
நீதிநெறி வழுவா, அறம் பொய்யா ஆட்சியதனை!
மூவேந்தர் முதல் கடையேழு வள்ளல்கள் வரை இன்றும் நம் மனதில் கோலோச்சும் அவர்தம் முடியாட்சி!
ஓரறிவு கொடிக்கும் தேர் தந்தவர்!
ஐந்தறிவு உயிர்கட்கும் நீதி வழங்கியவர்!
தம் குடி மகிழ அரசாண்ட மன்னர் கண்டு
கற்க வேண்டும் நாம் அரசாளும் முறைதனை இன்று!!
“சுதந்திர செங்கோல்”! அது இசைக்கும் நம் தமிழ் மன்னர்( மண்ணின்) பெருமை தனை!
நீதிக்கோல் ஒருபுறமிருக்க துலாக்கோல் மறுபுறமிருக்க
பாகுபாடின்றி நீதிபதியுடன்
நீதியும் கோலோச்ச!!
ஜனநாயகம் சிறப்புற
ஆட்சி மேன்மையுற
அரசுடன் மக்களும் கோலோச்ச!!
மனிதநேயத்தில் அன்னை தெரசா போல்
துணிவிலும் அமைதி மகாத்மா போல்
அறிவியல் அறிஞர் கனவு நாயகன் போல்
எழுந்திரு! விழித்திரு! என்று முழங்கிய இளைஞர் போல்!
மாஸ்டர் பிளாஸ்டர் போல்
கிராண்ட் மாஸ்டர் போல்
நடிகர் தலகம் போல்….
நாமும் நாம் சார்ந்த துறையில் கோலோச்ச….
வாழ்த்துக்களுடன்!!!
@Iyarkaiyin Kaarigai @Kamu pillai Sis
0 Comments