பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*
தலைப்பு : *காமபசியும் குப்பை தொட்டியும்*
முதலிடம்
சுண்ணாம்பு கலவையிலே தொட்டில் கட்டி.....!!!!
எச்சி இலை பஞ்சு மெத்தை விரித்ததேனோ.....!!!!!
உச்சந்தலை நனைந்ததே கெட்டுப்போன பாலில்தானோ....!!!!
முத்தமழை வழிந்தோடும் மேனியில், ஈ, எறும்பும் மொய்த்திடுதே.....!!!
சுற்றம் யாவும் காணாத கோலம்.....!!!!
நித்தம் புதைத்த மாக்களே - எனை காணாதேனோ...!!!
நிசப்த இரவுகள் உனை சூரையாட....
கருவண்டுகளும் இறக்கையிட்டு இரை தேட.....!!!!!
இதயப்பைகள் நிரம்பியதால் காதலோ....!!!!!
உடையவன் மீதாய் கொண்டாய் காதல்...
காதலோடு பசி கொண்டாய் ஏனோ....!!!!
இதயங்கள் இடமாறாமல் தடம் புரண்டோடுவதேனோ...!!!!
காமுகன் மாரீசனாய் உருவெடுத்து உட்புகுந்தானோ.....!!!!!
தூண்டலுமில்லா தீண்டலாய் பஞ்சுமெத்தைகள் பறந்தோட....!!!!
காம பசிக்கு தீணியாய் போனதேனோ.....!!!!!
மனஇச்சை தீர்க்கவே காதல் கொண்டாயோ....!!!!
காம பசி தீர்க்கையிலே பாதுகாக்க மறந்ததேனோ.....!!!!
பிண்டம் ஒன்னு வந்ததுனு கலைக்க மறுத்த நீயோ....!!!!!
வலி பொருத்து, குருதி இழந்து...
குறுக்கெலும்பு விரிகையிலே மொத்தமாய் நொருங்கிடுமோ.....!!!!!
வெளி வந்த ராசா வ நீ பார்க்கலையே.....!!!!!
வயித்து சுமை இறக்கி வைக்க போனியோ ஆதுரச்சாலை.....!!!!!
தூக்கி எறிய மணமற்று வைத்தியோ குப்பை தொட்டி......!!!!
தாயே....
நாய் குட்டிகளும் எனை முகர்ந்து போக....
நாதியற்ற புன்னகையில் குப்பைமேடு குபேரனாய்.....!!!!!
தாய்ப்பால் அற்று.... கதருவேனே செவிகளற்று போனாயோ....!!!!
தொட்டு அள்ளி கொள்ள கைகளற்ற இங்கே....!!!
எனை வரச்செய்ததேனோ இறைவா....!!!!
மூச்சடைத்து மோட்சையாக சில நொடிகளே....
எனை அனைத்து கொள் இறைவா....!!!!!
@Arun
@Kamu pillai Sis
0 Comments