அமிர்தகவி
சேலம்
மூன்றாம் இடம்
தலைப்பு : *நிறைவேறா ஆசைகள்*
எத்திசையும் நான் கண்டேன்
ஒத்திசைவும் உமை காக்க..
கத்தியழும் காகிதமே..
கருவாச்சியின் நியாபகமோ??
முத்திசைந்த முனி இங்கே
முனுங்கி நிற்கிறானே...
ஒத்திசைய மாட்டாயா..?
கார்மேக கவிமுகிலே..!
கண்டோரில்லை காதல்கொள்ள
தீண்டோரில்லை
தீண்டிஅழ...
வேண்டோனாய் வேண்டிநிற்கிறேன்..
வெண்ணிலவே விரைவாயா...?
புத்தாடை பூஞ்சிலையே..
புன்னகைக்கும் பெண்மயிலே..
பூரணபதில் தருவாயோ..
பூகம்பமாய் வருவாயோ?
எது எப்படியோ காலை விடிந்தது..
கனவு தெளிந்தது ஆசை முடிந்தது...
நிறைவேறா ஆசைநோக்கி
மீண்டும் ஓர் உறக்கம்..!
@Barathi Pratibha
0 Comments