பெயர் :அனிஷ். வீ
பங்கேற்பாளர்
தலைப்பு :
பிறை நிலவே
அவளின் முகம்
💫பிழையான என் வாழ்வில் பிழை திருத்த
வந்தவள்!
💫கஷ்டங்கள், கண்ணீரை கடந்து
என்னை கருவில் சுமந்தவள்!
💫நட்சத்திரம் ஆயிரம் இருந்த பின்னும்
நிலவே இரவுக்கு அழகு !
💫சொந்தங்கள் ஆயிரம் இருந்தும்
என்னை கருவில் சுமந்த என் தாயே உலகில் பேரழகி!
💫கருப்பான இரவில் நிலவே ஒளியாக அமைகிறது!
💫இருளான என் வாழ்வில் இருக்கும் ஒரே வெளிச்சமாக என் தாயே இருக்கிறாள்!
💫சொந்தங்கள் என்னை வீசி சென்றாலும்
என்னை சொந்தம் கொள்ளும் உறவே!
💫நிறைமாத நிலவே அம்மா
என்றுமே என்னை நினைத்து வாழும்
உறவே அம்மா!
💫பிறை நிலவே அம்மா நீ உன் சோகத்தை மறந்து
எனக்காக உன் புன்னகை முகத்தை மட்டும் காண்பித்து
என்னை சிரிக்க வைக்கிறாயே!
என்றுமே நீ ஒரு அதிசயமே அம்மா.....
@Arun
0 Comments