பெயர்
அன்பு ❤️ மட்டும்
அருண்
தலைப்பு
எனது நிறைவேறாத ஆசைகள்
முதலிடம்
1) பசி இல்லாத தமிழகம் வேண்டும் அதில் பஞ்சம் இல்லாத வாழ்க்கை வேண்டும்
2) பிச்சை இல்லாத நாடு வேண்டும்
அதில் எச்சை இல்லாத மனிதன் வேண்டும்
3) லஞ்சம் இல்லாத அதிகாரி வேண்டும்
அதில் வஞ்சகம் இல்லாத நன்மை வேண்டும்
4 ) தலைக்கணம் இல்லாத தலைவன் வேண்டும் அதில்
தமிழக மக்களின் தன்மானம் காத்திட வேண்டும்
5) சாக்கடை இல்லாத தெருக்கள் வேண்டும் அதில் எம் பிள்ளைகள் சடு குடு ஆடிட வேண்டும்
6) பள்ளம் இல்லாத ரோடுகள் வேண்டும்
அதில் பல பல உயிர்கள் காத்திட வேண்டும்
7) நேர்மை உள்ள காவலர் வேண்டும் அதில் எம் குடி மக்கள் நிம்மதியாக உறங்கிட வேண்டும்
8) ரவுடிகள் இல்லாத ஊருகள் வேண்டும் அதில் எம் குல பெண்கள் நிம்மதியாக நடந்திட வேண்டும்
9) குடிசைகள் இல்லாத வீடுகள் வேண்டும் அதில்
எம் குடிமக்கள் அனைவரும் வாழ்ந்திட வேண்டும்
10) கட்டணம் இல்லாத பள்ளி கல்லூரி வேண்டும்
அதில் எம் ஏழை பிள்ளைகள் படித்திட வேண்டும்
11) நம் உயிரை காக்கும் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் வேண்டும் அதில் தனியார் மருத்துவமனை வேரோடு ஒழிந்திட வேண்டும்
12) என் ஏழை விவசாயி தற்கொலை நிறுத்திட வேண்டும்
அதில் அவர் குடும்பத்தை நடு தெருவில் நில்லாமல் தடுத்திட வேண்டும்
13) ஒவ்வொரு பட்டதாரி படிக்காத இளைஞனின் வேலை கிடத்திட வேண்டும் அதில் என் இளைய சமுதாயம் தீய வழியில் செல்லாமல் தடுத்திட வேண்டும்
14) பச்சிளம் குழந்தை பலி கொடுப்பதை நிறுத்திட வேண்டும்
பாசம் இல்லாத கள்வர்களை உயிரோடு கொளித்திட வேண்டும்
15) பாலியல் வன் கொடுமை வேரோடு அழித்திட வேண்டும்
அதை செய்பவன் ஆண் உறுப்பை அறுத்திட வேண்டும்
16) ஜாதி மத பேதத்தை ஓழித்திட வேண்டும்
அனைத்து மக்களும் ஒன்றே என்று சொல்லிட வேண்டும்
17) என் நாட்டில் ஏழைகள் உயர்ந்திட வேண்டும்
அதை இருப்பவன் கொடுத்து உதவிட வேண்டும்
18) முதியோர் இல்லம் அனாதை இல்லம் இல்லாமல் நம் நாடு வாழ்ந்திட வேண்டும்
அதை செய்பவன் குடி உரிமம் பறித்திட வேண்டும்
19) மனிதன் மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் பொறாமை வஞ்சகம் இல்லாமல் வாழ்ந்திட வேண்டும்
20) இது கனவோ அல்ல நினைவோ எதுவாக இருப்பின்
என் நிறைவேறா ஆசைகள்..
இல்லாமல் இருந்திட வேண்டும்
இவன்
அன்பு ❤️ மட்டும்
@kamupillai
@parathi baski
0 Comments