ம.சுதா கவி
சிவகங்கை மாவட்டம்
இரண்டாம் இடம்
தலைப்பு : *"கோலோச்சி"*
பண்டைய தமிழகமாம்
பரந்த நில முப்பிரிவாம்
மூவுலகத் தோற்றமாம்
பழந்தமிழ் சாட்சியாம்
முடியுடை மூ வேந்தராம்
வேந்தரின் கோலோச்சியாம்
முதிர் நல் அரசாட்சியாம் !
மேற்கு நின்ற பகுதியாம்
தமிழகத்தின் கேரளமாம்
கல்வியிற் செறிந்ததாம்
மலையாக தொடருமாம்
வில் அம்பு எய்வதாம்
விற்கொடியின் வீரராம்
சேரர் கோலோச்சியாம் !
திருச்சி ஒரு புறமாம்
மா தஞ்சை மறுபுறமாம்
பெரிவுடையார் கோயிலாம்
பெருஞ் சித்திர படைப்பாம்
காவிரி சூழும் சூரிய வம்சமாம்
புலிக் கொடி உடையோனாம்
சோழர் கோலோச்சியாம் !
கண்ணகி கண்ணீராம்
கரத்தே மீன் கொடியாம்
தமிழ்சங்கம் நிறுவியோராம்
தனித்தமிழ் சேவையாம்
தமிழக மல்லிகை வாசமாம்
தூங்காத மதுரையாம்
பாண்டியர் கோலோச்சியாம் !
மன்னர்கள் ஆண்ட ஆட்சியிலே
செங்கோ லோச்சியும்
கொடுங்கோ லோச்சியும்
பாகமாய் பிறந்ததாம் !
கோலோச்சி சிறந்ததாம் !
@ Brathi Bashki
@ Kamu Pillai
0 Comments