ஆர் ஜே சாரா
இலங்கை
*படக்கவிதைப் போட்டி*
தலைப்பு:
*"பிஞ்சுகளின் அவலநிலை"*
பச்சிளம் குழந்தை என்று செல்லமாய் கொஞ்சி விளையாட வேண்டிய பூவை காம பசி தீர்த்து கொண்டு வாழுகின்ற பாவிகளே !
குழந்தை என்று கூட பார்க்காத காம வெறியர்களுக்கு பெயர்தான் ஆணா ?
அந்தப் பச்சிளம் குழந்தை மேல் காமவெறி எண்ணம் உனக்கு எப்படி வந்ததோ !
உன் மனம் என்ன கல்லா சிறு உயிரு துடிக்கும் பரிதாபம் கூட உன் நெஞ்சை பிளக்கவில்லையா ?
காமவெறி கொண்ட மனிதன் நீ பிறந்ததும் தாய் என்ற ஒரு பெண்ணிலிருந்து தான் ஏன் மறந்தாய் !
பூ போல் பார்க்க வேண்டிய பிஞ்சுகளை ஏன் புயல் போல் கசக்கி எரிந்து விட்டாய் !
தீயதொடுதல் என்று கூட உணராத பிஞ்சு என்பதை மறந்த அரக்கன் அல்லவா நீ !
சட்டங்கள் கொடுக்கவில்லை உனக்கான தண்டனையை பொறுத்துக் கொள் நிச்சயம் கடவுள் கொடுப்பான் உனக்கான கூலியை !
உனக்கெல்லாம் மனசு என்ற ஒன்றை கடவுள் படைக்காமல் கல்லை மனதுக்குள் புதைத்து விட்டான் போலும் !
கருவறை என்று கூட உருவாக முன் கழிப்பறையாக்கிய அரக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் உயிரோடு கல்லறை !
@Arun
@Kamu Pillai
0 Comments