பெயர்
அன்பு ❤️ மட்டும்
அருண்
தலைப்பு
காம பசியும் குப்பை தொட்டியும்
பங்கேற்பாளர்
குப்பையிலே மெத்தை போட்டு
என்ன தூங்க வச்சி போனவளே
நா குப்பையினு தெரிஞ்சிகிட்டா என்ன குப்பையிலே வீசி புட்டா
நான் கரு தெரித்த இடம் தங்கமாச்சி
நான் பிறந்த இடம் கோவிலாச்சி
நான் கிடந்த இடம் மட்டும் ஏனோ குப்பையாச்சி
உனக்கு பசி எடுத்தா தட்டுல சோறு உண்டு
உன் காம பசிக்கு கட்டிலிலே இடம்முண்டு
உன் மாமாகாரன் வந்து புட்டா
அவன் காம பசியை தீர்த்துகிட்ட
உன் கருவறையில் என்ன விட்டு புட்டா
அவன் சந்தோஷத்தில் கிளம்பி விட்டா
அவன் ஆசை படாம நான் பிறந்த்தால
என்ன அனாதையா நீ வீசி புட்டா
பால் ஊட்ட நீ இல்ல பசியால் துடிக்குது இந்த புள்ள
உனக்கு பசி எடுத்த சோறுபோட ஆல் இருக்கு
எனக்கு பசி எடுத்த பால் கொடுக்க யார் இருக்கா
பசியால் நானும் துடிச்சி புட்டா
என் பசியை ஐந்தறிவு ஜீவன்கிட்ட தீர்த்துகிட்ட
கிடைத்த அனைத்தையும் தின்னுபுட்டா
யா உடம்புள தெம்பையும் ஏத்திகிட்டா
கோனி பையா தூக்கி கிட்டு
கிடச்சதை எல்லாம் பொறுக்கி கிட்டு
ஒரு வேலை சோறு தின்ன நா தெரு தெருவா ஓடுரம்மா
குப்பையில கிடந்ததெல்லாம் அத்தனையும் காசாச்சி
அந்த குப்பையிலே கிடந்த நான் செல்லா காசு ஆனாதென்ன
நாய் பால் குடிச்சதால நா நன்றி கெட்டு போனதில்ல
தாய் பால் குடிச்சவளே நீ தரம் கெட்டு போகாதடி
என்ன நீயும் மறந்து புட்டா
மத்தவன தேடி கிட்ட
இன்னொரு குப்பை தொட்டியில் நீ என்னைபோல வீசிடாத
@kamu pilli
@ இயற்கையின் காரிகை
0 Comments