என்னை சுமக்கும் காலணியே

பெயர் :ரூபா ஸ்ரீ

இரண்டாமிடம்...

🔹தலைப்பு :*எனை சுமக்கும் காலணியே*

🔹நான் இதமாக நடக்க 
உன் பாதம் தேய்த்து கொண்டாயே..!! 

🔹என் பாதத்தை துளைக்கவந்ததை 
உன் தேகத்தில் ஏற்றிக்கொண்டாயே..!!

🔹கல்லிலும் முள்ளிலும் 
கவலையின்றி நான் நடந்திட 
உற்ற துணையாய் என் கூடவே நடக்கிறாயே..!!

🔹உன்னை சிலநேரம் பிரியநேர்ந்தாலும் 
மீண்டும் ஓடோடி வந்து 
அணைத்துக் கொள்வதில் தானே காலின் ஆனந்தம் அடங்கும்...!!

🔹உற்ற துணையாய் நீ கூடவே துன்பத்திலும்....

🔹பல வண்ணங்களில் உன் எண்ணங்கள் ஏற்றாற்போல் அளவிலேயே
உன்னழகு  உள்ளது..!!

🔹புதிதாய் நீ இருக்கமட்டும் 
ஆற்றை கடக்கும் போது உனை என் கையும் ஏந்துதே.!!

🔹கிழிந்த பின்
தூக்கி எறியப்படும்
செருப்பின் அருமை,
தொலைந்த பின்
தான் அறியப்படும்..!!

🔹துச்சமாய் உன்னால்
பார்க்கப்படும் செருப்பு
உன்னிடம் இல்லையேல்,
நீ துச்சமாய்
பார்க்கப்படுவாய்..!!

🔹வாழும் காலத்தில்,
வலிகள் சுமைகள்
வேதனைகள் மற்றும் பல
அவமானங்களைத் தாங்க
வேண்டியிருக்கும்.!!

🔹செருப்பைப் போலத்தான்
நம் வாழ்க்கையும்..!!


@kammu pillai 🔹
@arun🔹

0 Comments