காம பசியும் குப்பை தொட்டியும்

* *தலைப்பு* :
 
*காம பசியும் குப்பைத் தொட்டியும்*

இரண்டாமிடம்.

காதலெனும் புனிதத்தை காமத்தால் சிதைத்தாயோ//
அன்பு எனும் ஆயுதத்தை ஆசைக்காக கொண்டாயோ//
 மனிதனாய் பிறந்த மிருகக்குணம் கொண்டவனே//
 பெண்மை கொண்ட பெண்ணே நீயும் ஒரு தாயா !!!

தவமாய்  தவமிருக்கும் தாய்மார்கள் பலர்// கோவில் கோவிலாக சுற்றுபவர்கள் பலர்// இருக்க என்ன பாவம் செய்ததோ அந்த சிசு//
 குப்பைத் தொட்டியில் தாலாட்டு கேட்க!!!

தரணியில் தாகம் எடுத்த குழந்தையின் அலறல் //
சத்தம் அகிலத்தையும் இரண்டாகப் பிளக்கிறதே//
துணியில் சுற்றிய சிசுவின் சிரிப்பு// சத்தம் இதயத்தை சுக்கு நூறாக சிதைகிறதே!!! 

பத்து மாதம் சுமந்த உன் மனமும் கல்லானது// குப்பைத்தொட்டியில் வீசி சென்ற போது// 
கொத்துக் கொத்தாய் முளைக்கும் குழந்தைகள்//
 காப்பகம் பார்த்தால் பதைபதைக்கிறது என் இதயம்!!!

கடைவீதி ஓரத்திலே குப்பைத் தொட்டியிலே//
 எச்சில் இலைகளில் இயற்கை தென்றலிலே//
 இசையின் ஒலியிலே பிஞ்சு குழந்தையின்//
 புன்னகை தேசம் புதிய பூச்செண்டாய் கண்டேன்!!!

புற முதுகில்  குத்தியவனை கூட மன்னிப்பேன்//
ஆனால்  தரம்கெட்ட மனித மிருகத்தை மன்னிக்காது என் இதயம் !!!

 குப்பைத்தொட்டி வேண்டாததை போடவே //
கருவில் உதித்த கலங்கரை விளக்கத்தை//
 காணாமல் செய்ய மனம் வந்ததோ மனிதம் மறந்த ஈனப்பிறவியே!!!

பத்துமாதம் உன் கருவறையில் இருந்ததைவிட// குப்பைத் தொட்டியே மேல் என துடிக்கிறது சிசுவின் இதயம்!!!

இரா.மகாகிருஷ்ணன் மயிலாடுதுறை

@⁨Arun⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments