ம.சுதா கவி
சிவகங்கை மாவட்டம்
*படக் கவிதை போட்டி*
தலைப்பு :*"தண்டனை தீர்வில்லை"*
மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்தோம் என்றார் பாலியற் கொடுமையால் வாடிய பாவையாய் பாரினிலே வாழ்கிறோமே !
கண்ணீர் புகையிலே காம வெறியாலே பாவக் குழியிலே
காம பசிக்கு இறையாய்
பரிதவிக்கும் பூவையர் ஆனோமே !
கைகள் போர்த்தி ஊமையாய் கண்கள் கட்டி கதறும் குரல் காது கேளாது வேதனைகள் எத்தனை எத்தனை !
பெண்ணின் அவலம்
பெண்ணிற்கு மட்டுமா ?
பெண்ணாய் பிறந்தே பாவம் செய்தோமா ?
ஒரு பெண்ணின் அவலம் அவள் வம்சத்தையே உருக் குலைத்துவிடுமே ! அந்த குடும்பமே மானம் உயிர் தன் பெண்ணை இழந்து துடிக்குமே !
அரக்கர்களை அழித்தே கொடூரங்கள் அடியோடு அகற்றிட வேண்டும் ! அகிலத்தில் பெண்ணை தொடுவதற்கே அச்ச வேண்டும் !
பால் மணம் மாறா பிஞ்சுகள் இங்கே கசக்கி எரியப்படுவது சாதாரணமான ஒன்றா !!!
சிசுவைக் கூட நாசம் செய்யும் சண்டாளர்களுக்கு தண்டனை தீர்வாகிடுமா தவறுதான் தீர்ந்திடுமா !
எங்கள் மானத்தை அழித்து மங்கலம் குலைத்து வாழ்வையே சிதைத்த அந்த அரக்கனின் தூக்கு !
எப்படி ? எங்களின் தீர்வாகும் மரணத்தை விட காமம் பெரிதென்கிற கொடூர்கள் திருந்த வாய்ப்பே இல்லை !
கர்ப்பை இறைவனின் புனிதமாய் பெண்கள் எண்ண வேண்டும் !
தன் மனைவியை கூட மதிப்புடன் நடத்த வேண்டும் !
கண்ணீர் சிந்திய கன்னியின் கர்ப்பும் கர்ப்பு என அறியா கதறிய பிஞ்சு குழந்தைகளும் எத்தனை !
எத்தனை மரணங்கள் 'அய்கோ' நினைத்தாலே அங்கமெல்லாம் எரிமாலையாய் எரிகிறது !
கண்ணீருக்கும் கதறலுக்கும் காமக் கொடூரனுக்கும் தூக்கு தீர்வு இல்லை தவறுகள் இல்லாமல் போக வேண்டும் !
நடந்த தவறுகளுக்கு ஈடாக தண்டனைகள் மட்டும் தீர்வாகாது !
எனினும் அது தவிர வேறு வழியில்லை ... !
ஆனால் தண்டனை தீவிரமாகவும் விரைவாகவும் தீரக்கமாகவும் நியாயமாகவும் நீதியாக வழங்கப்பட வேண்டும் !
@ Arun
@ Kamu Pillai
0 Comments