என்னை சுமக்கும் காலணியே

பெயர் : *நிதர்சண கவிஞன் ரஹ்மான்*

முதலிடம்

தலைப்பு : *என்னை சுமக்கும் காலணியே*

🩴சப்பாத்து என பெயர் கொண்டோனே....!!!

🩴மீள்மமிட்டு உருவெடுத்து வந்தாயே நீயும்...!!!

🩴அட்டை பெட்டியினில் தஞ்சமாய் நீயும்....

🩴விலைபோனதாலோ படிதாண்ட மறுத்திட்டாயோ....

🩴பூ பாதம் காத்திட உடல் கிழித்தாயே.....!!!!

🩴எனை தாங்கிட்ட வலியோன் நீயே....!!!

🩴கூர்முனை கல்லும் உட்புகுந்திடா காத்திடுவாயே....!!!

🩴இணைபிரியா காதலர்கள் நீ தானோ..!!!

🩴புழுதியோடு உறவாடி  வந்திடுவாய் நீ

🩴மெல்ல சகதியோடு சல்லாபம் செய்திடுவாய் நீ....

🩴கள்வனையும்  கண்கவர்ந்து இழுத்திடுவாயே...

🩴ஊர்முழுக்க சுற்றினாலும் தளர்ந்திடா நண்பன் நீயே....

🩴ஆற்றை கடக்கும் தனில் ஆறுதல் கொள்வாயோ.....

🩴தலைக்கு மேல் ஒய்யாரமாய் அமர்வதனால் ....!!!

🩴ஒருமுறை பிரிந்தாலும் தூரமாய் சென்றிடுவாய்....!!!

🩴வீதிவரை அழைத்தவர் ஏனோ வீட்டிற்குள் அழைத்திடா போனது.....!!!!

🩴வாய்ப்பிற்காக அழைந்தோடிய போதும் உடன் இருந்தவனே...

🩴ஓடாய் தேய்ந்த போதும் என்னை காத்தவனே..!!!

🩴தெய்வ சிலைகளுக்கோ பாதுகை இட்டாரே....

🩴காலம் தழுவியதோர் கால்பூட்டணிகளாய் நீ....!!!

🩴கொண்டைக்கால் மறைத்தொழிந்து வாரிட்ட அழகோ....!!!

🩴உன் பரம்பரை நான் அறிவேன்....

🩴குத்திச் செருப்பு தொட்டு குறட்டுச் செருப்பானாய்.....!!

🩴தோற்பரம் இட்டு போர்யிட்ட தமிழனடா....!!!

🩴அடிபுதை அரணமாய் பாதுகாத்தோன் நீயே....!!!

🩴நிலத்தை பற்றுவித்து ஓடி முன்னேர...

🩴சப்பாத்து வகையானாயோ- வெற்றி மாலை சூடிட....

🩴குதிகால் உயர்த்தி உயரச் செய்தவன் நியே...!!!

🩴தூக்கி எறிந்திட்ட போதும் அசையாதோனே....

🩴உனக்காய் வடித்திட்ட வரிகள் இதுவே.....!!!!!!!

@⁨Kamu pillai Sis⁩ 
@⁨Iyarkaiyin kaarigai💙⁩

0 Comments