தலைப்பு: என்னை சுமக்கும் காலணியே.....!!
எவனே எனக்கு பொருந்தினான்...! அவனே என்னுள் பொருத்தினான்...!
புறப்பட்டதும் கால்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் கதைத்தான்..!
அவ்வபோது கடித்தான்....!
காலங்கள் ஓடியது...!
காலோடு ஓடினான்..!
புதிய பயணம் புதிய புதினம்
படைக்க புறப்பட்டான்...!
மலை பயணமோ
மது பயணமோ தன்னோடே தவழ்ந்தான்...!
அப்பா கோபத்தையும்
அம்மாவின் அதிக வார்த்தையும்
அண்ணை அசிங்கபடுத்து அடுத்த வார்த்தையும் அவன் இல்லா முடியாது..!
முழு நாளும் ஓடினாலும் ..!
முட்கள் தைத்தாலும்...!
தாங்கி கொள்வான் எனக்கு முன் வாங்கி கொள்வான்..!
வலி என்று நான் உணரும் முன் உதிரம் சிந்துவான் ..!
பலசமயங்களில் அவனின் தேய்மானம் தான் என் தன்மானம் காத்தது ...!
உற்ற நண்பன் ...!
உணர்வு காதலன்...!
காலன் சதி செய்யவே
சுமந்த பந்தம் சுமை தாங்காமல் இறக்கி வைக்க..!
என்னை சுமந்தவன்...!
இறுதி பயணத்திலும் இடுகாடு வந்தான்....!
என்னை சுமந்த காலணியே ...!!
நீண்ட பயணம் ....!
நீண்டது பயணம்...!
பெயர்: தினேஷ்
ஊர்: அரக்கோணம்
0 Comments