பெயர் :- கவியாரணி
சா.கிருஷாந்தி
பங்கேற்பாளர்
தலைப்பு :- பிறை நிலவாய் அவள் முகம்
இரவு வானில் வரும்
பிறையின் ஒளியில்
ஏதோ ஒன்றின் தேடலுடன்
பார்த்து கொண்டிருந்தேன்
அந்த தாரகைகளின் இடைநடுவில்
தெரிந்ததோ அவள் முகம்
அந்த முழு நிலவிற்கும் கூட
அத்தனை ஒளி இல்லை
ஆனால் இந்த பேதையின்
பிறை முகத்திலோ
எத்தனை தேஜஸ் தெரிந்தது
தேடி கிடைக்காது அந்த
பிறை முகம் காட்டும்
பார்வைகள்
அவள் விழி இமைக்கும் நொடி
என் மனம் நொடிந்து
அவள் புருவங்களில் விழத்தான் செய்தது
அவள் உதடுகள் அசைந்து
நான் கேட்கவில்லை அவள் மொழி
ஆனால் அவள் மௌனங்கள் ஏதோ என்னிடம் சொல்ல
துணிந்தன
அதை கேட்க என் காதுகள்
முயலவில்லை
காரணம்
அவள் பிறை முகம் காட்டும்
நிலவினும் மிஞ்சிய
ஒளியில் தொலைந்து
போனேன் போல
என்னை நான் தேடுகிறேன் அவள் பார்வைகளில் ஒழிந்து
கொண்டேன்
பிறை நிலவு அவள் அல்ல
அவள் மூக்குத்தியே
முழு நிலவாய் மின்னுகிறதே
Insta id :- krish_ashiq
@Kamu pillai Sis
@+91 77085 86804
0 Comments