பிறை நிலவாய் அவள் முகம்

க.அபினேஷ்
கூடலூர்

இரண்டாமிடம்

தலைப்பு : *பிறை நிலவாய் அவள் முகம்*


*இதுவரை நானும் எனது தனிமையும் என கடந்து சென்ற இரவுப் பொழுதுகளில் பிறை நிலவாக காட்சியளிக்கிறது அவளது முகம்...*

*என்னவளை பிறை நிலவோடு ஒப்பிடும்போது நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என என்னுடன் சண்டை போடுகிறது  நட்சத்திரக் கூட்டங்கள்...*

*அன்று அந்த நிலவை பார்த்து உணவருந்திய போது தெரியவில்லை, இன்று அந்த நிலவுடன் தான் ஜீவிக்க போகிறேன் என...*

*பல கவிகளுக்கு உவமையாக காட்சியளித்த அந்த நிலவும் பொறாமை படுகிறது ...*
*இன்று என் உவமைகள் அனைத்தும் என்னவளை கொண்டுள்ளதால்...*

*நீரின் மீது விழும் பிம்பத்தின் தடம் நிலவுக்கு தெரியாது...*
*என் உயிர் மீது படும் என்னவளின் தடம் அவளுக்கே புரியாது....*


*என்னுடன் எப்போதும் இருக்கும் என்னவள் இடைப்பட்ட நாட்களில் என்னை விட்டு விலகுவது ஏன்னோ...*

*ஐயோ மறந்துவிட்டேன்..! அவளோ  நிலவுபோலதானே அப்படித்தான் இருக்கக் கூடும்...*

*என்னவளை பற்றி எழுதியவுடன் அந்த நிலவுக்கும் கோவம் வந்து விட்டது. என்னுடன் சண்டையிட்டு தன்னை மறைத்துக் கொண்டு சூரியனை எழுப்பி விட்டது.....*


@⁨Arun⁩

0 Comments