தலைப்பு : என்னை சுமக்கும் காலணியே !!
💫என்னை சுமக்கும் காலணியே !
💫நான் உன்னை தாங்கியதை விட
நீ என்னை தாங்கிய நேரங்களே அதிகம்
💫உதவி முடிந்த பின் தூக்கி எரியும்
உறவுகள் மத்தியில்,
என்னை நீ தூக்கி எரியாமல்
நான் விட்ட இடத்திலேயே இன்றும்
எனக்காக நீ காத்திருக்கிறாய்,,
💫காதலர்கள் கூட உன்மீது பொறாமைபடுகிறார்கள்
💫காலணிகளில் ஒன்று இல்லையெனில் மற்றொன்று
உயிர் வாழாது,
மனிதர்கள் கூட அந்நிலை புரியா நிலையில், நீ உயர்ந்திருக்கிறாய் !!
💫சேறு, சகதி, மேடு, காடு, முள், கல் தரும் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டு எனை காக்கிறாய்
💫ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உன்னிடம் இருக்கும் மனிதாபிமானம் கூட அவர்களுக்கு இல்லை,
💫உழைத்தால் செருப்பாக உழைத்து தேய வேண்டும் என்று உன்னை எடுத்துக்காட்டாய் கூறிவிட்டு காரியம் முடிந்த பின் உன்னையே உதாசினப்படுத்தும்
மனிதனுக்கு முன் என்றும் நீ உயர்ந்தவனே !!
💫நான் நடக்கும் வயதிலிருந்து நடக்க முடியாமல் படுக்கையோடு படுக்கும் வயது வரை என்றும்
என்னுடன் இருந்த உன்னை நான் என்றும் மறவேன் !!
பெயர் : இரா.ரதிப்பிரியா
ஊர் : இடைப்பாடி
Insta id : ennavalin_kavidhaigal_
@Iyarkaiyin kaarigai💙
@Sowbarnika Pratibha
0 Comments