காம பசியும்
குப்பை தொட்டியும்...
இரண்டாம் இடம்...
இயற்கையின் காரிகை
🌺விதை விதைத்தவன் யாரென்றும் நான் அறியேன்...
🌺என்னை வினை அருத்தவள் யாரென்றும் நான் அறியேன்...
🌺கரு உருவானது
தாயின் கருவறையில் தான்...
🌺உடல் கிடந்ததோ குப்பை தொட்டியில்...
🌺கசங்கிய காகிதம் பொறுக்கிட வருபவரும் ஏனோ
என்னை பொறுக்கிட
மறுக்கிறார்கள்...
🌺அழுது அழுது பட்டினியால் கிடந்து உறங்கியே
பழகி போனது பல நாட்களும்...
🌺கொசுவும் ஈயும் மாறி மாறி
ஊசி போட அழுதும் பயனில்லை...
🌺உழைத்து உண்ணும் அளவு உடம்பிலும் வழுவில்லை....
🌺யாருடையதோ காம பசி தீர்ந்திட
என்னை ஏனோ ஈன்றெடுத்தனர்...
🌺ஈன்றெடுத்தவர்களுக்கே என்னை பிடித்திடாத போது
🌺யாரென்றே தெரியாதவர்களுக்கு மட்டும் என்னை எப்படி பிடித்திடும்
🌺எச்சில் இலை சோறு போட கூட இங்கு யாருமில்லை...
🌺பசியில் துவண்ட என் வயிறின்
கூப்பாடு கேட்டு வானமும் கொஞ்சம் கண்ணீர் சிந்திட..
🌺நனைந்தபடி கண் மூடுகிறேன்...
🌺மனதில் எண்ணம் மட்டும் தோன்றியது...
🌺குப்பை கிடங்கில் வீசி எரிந்ததற்கு
நிகராக
🌺ஏதேனும் அனாதை இல்லத்தின்
வாசலில் போட்டு இருந்தால் ஒருவேளை உணவேணும் உண்டு
வாழ்ந்திருப்பேன் ..
🌺இந்த நாய்களின் கடியில் இருந்தும்
எச்சில் இலையின் பழைய சோற்றில் இருந்தும்...
🌺குப்பை நாற்றத்தில் இருந்தும்
பிழைத்திருப்பேன்
🌺இப்போது கொஞ்சம் கொஞ்சமாக
உயிரும் போகுதே இம்மண்ணை விட்டு....
@Kamu pillai Sis
@Arun
0 Comments