என்னை சுமக்கும் காலணியே

மாதவன் கவிச்சிதறல்

என்னை சுமக்கும் காலணியே :

சுமக்க மறுத்திருக்கிறேன் பலவற்றை, முடியாதென்றெண்ணி,
அவ்வப்பொழுதும் சுமக்க மறுக்கா தெய்வமே..
பெற்றவள் கூட சொல்லி விடுகிறாள் நான் உன்னை சுமந்தேனென்று,
சுமந்ததை சொல்லா தெய்வமே நீ தான் என் காலணியே..
பள்ளமோ மேடோ,
முற்களோ கற்களோ,
சேரோ சகதியோ,
குளமோ குட்டையோ,
உன் தடங்களே எங்கும்,
ஓங்கி உயர்ந்தவனுக்கும்,
தட்டி தாழ்ந்தவனுக்கும்,
ஓடி உழைப்பவனுக்கும்,
உடலிளைக்க ஓடுபவனுக்கும்,
முதல் காவல் நீயே..
என் காதல் உடைந்த கணமும், கர்வமே கொண்டேன்,
நின் காதல் என்றும் உன் துணையுடனே..
என் பாதம் தரை பட்ட நாள் முதல், உன் சேவை எனக்காக..
விதங்கள் மாறின,
அளவு மாறின,
அடையாளம் மாறின,
ஆனாலும் காலணியே நீ தான் நான் தேடும் முதல் தேடல்,
நான் வீட்டுக்கு விடை கொடுக்கும் கணத்தினில்..
வணங்கப்படாத,
வணங்க வேண்டிய, 
வாழ்த்த வேண்டிய பாதுகாவலன் நீயே என் காலணியே..

 மாதவன் கவிச்சிதறல்..

Insta id : kavi_chidharal_98

@⁨Sowbarnika Pratibha⁩ 
@⁨Iyarkaiyin kaarigai💙⁩

0 Comments