கோலோச்சி

கோலோச்சி

மூன்றாம் இடம்

குடிமக்களின் குடிலை காத்தவன்...
குன்றாத வளத்தினை கொண்டவன்...

தேவைகளை அறிந்து கேட்கும் முன்பே கொடுப்பவன்...
தேடி கிடைத்திட்ட சங்க இலக்கியத்தின் தலைவன்...

பசுவின் கன்றிற்கு அறம் தவறாது நீதியை வழங்கிய மனுநீதிச் சோழனே.!!

குளிரால் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்தி கொடைமடம் செய்த பேகனே.!!

முல்லைக்கொடியோ படர்ந்து வளர்வதற்கு தன் தேரை தந்திட்ட பாரியே!!

இரவலர்க்கு இல்லை என்று உரைக்காமல் அள்ளி கொடுத்திட்ட காரியே.!!

தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை கொடுத்த அதியமானே!!

தன்னிடம் இரவல் கேட்டு வருபவருக்கு இல்லறத்திற்கு முழுமையும் கொடுத்த நள்ளியே.!!

தன் நாட்டையே கூத்தாருக்கு கொடுத்து உதவிய ஓரியே.!!

உதவி வேண்டியவர்களுக்கு ஊர்களை கொடையளித்த ஆய்யே.!!

ஏரினைப்பூட்டி தடம் மாறாமல் உழவு செய்கின்ற உழவனைப் போல செங்கோல் கொண்டே வழி பிறழாமல் ஆட்சி செய்கின்றவன்.!!

புலவர்களின் பசி துயரினைப் போக்குகின்றவன்.!!

தமிழையும் மக்களையும் போற்றி காக்கின்றவன்.!!

செங்கதிரின் விரிவினைப் போல விரிந்த பரப்பிலே செங்கொல் ஆட்சி நடத்துப்பவன்.!!

பொன்னையும் மணியையும் வாரி இறைக்கின்ற வள்ளல் தன்மை கொண்டவன்.!! 

கோ எனும் அடைமொழி கொண்டே கோலோச்சுகின்றான்...

                      கு.ரமேஷ்குமார்       
Insta : @rameshyogi_10


@⁨Barathi Pratibha⁩ 
@⁨Iyarkaiyin Kaarigai⁩

0 Comments