தலைப்பு :- என் காலனியே 

பங்கேற்பாளர்

அடேய் காரியக்காரா... 
உன்னை குளிரூட்டப்பட்ட அறையில் காட்சிப்பொருளாக பார்க்கும்போது கொதித்தெழுந்தேன்.
பசிக்கு உண்ணும் உணவு வீதியில்,   காலடியில் சிறை கிடைக்கும் நீயோ குளிரூட்டப்பட்ட அறையில்.  
அப்போதுதான் உணர்ந்தேன்,  உனக்கு வந்த வாழ்வு இன்று குளிர் அறையில் நீ ...
நாளை பல சுமைகளைத் தாங்க தயாராக இருக்கும் வலியவன் ஆக உன்னை கருதினேன் ...

நீ மிதி பட்டாலும் உன்னை மிதித்தவர் பாதம் புண்படாத புண்ணியவான் தான் நீ ... 
என் காலனியே  நீ தேயும் வரை என் பாதுகாவலன் நீ .....

 *வலியின் தோழன்*
   இரா . ராஜ்குமார்
@⁨Iyarkaiyin kaarigai💙⁩ 
@⁨Arun⁩