என் பார்வையில் எதிர்கால இந்தியா
இரண்டாம் இடம்
எங்கும் சமத்துவம் நிறைந்திட வேண்டும்.!!
எதிலும் ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும்.!!
இளைய சமுதாயம் வீறுகொண்டு எழுந்திட வேண்டும்.!!
இன்ப தமிழை நாடெங்கிலும் கொண்டு சேர்த்திட வேண்டும்.!!
கடைக்கோடி மக்கள் வரையிலும் பசி பிணியை போக்கிட வேண்டும்.!!
கடமைகளை செய்திட கையூட்டு வாங்குகின்ற நிலையை அகற்றிட வேண்டும்.!!
உழவனின் வியர்வை துளிகளுக்கும் மதிப்பளித்திட வேண்டும்.!!
உழுகின்ற கலப்பையை தெய்வமாய் போற்றிட வேண்டும்.!!
சாதி கொடுமைகளை வேரொடு பிடுங்கி எறிந்திட வேண்டும்.!!
சரித்திரம் படைக்கும் பெண்மையும் சாதி கொண்டு ஒடுக்கிடும் அவல நிலையை அடியோடு ஒழித்திட வேண்டும்.!!
கனவுகளை சுமந்து ஓடாய் தேய்ந்து கொண்டிருக்கும் பெண்மையின் சுதந்திரம் காத்திட வேண்டும்.!!
காற்றில் பறந்து நீதி தேவதையின் கண்களை மறைக்கின்றது அவள் உடுத்திய ஆடை - கயவனின் கொடுரத்தாலே.!!
கயவனின் எண்ணத்தை களையெடுத்திட சட்டத்தை கடுமையாக்கப்பட வேண்டும்.!!
வெற்று வார்த்தையாய் போய்விடாமல் வெற்றி வரிகளாய் பொறிக்கப்பட வேண்டுமே - எதிர்கால இந்தியாவை.!!
கு.ரமேஷ்குமார்
படவரி : rameshyogi_10
@Barathi Pratibha
@Kamu pillai Sis
0 Comments