தெய்வ திருமகள்(ன்)

பெயர்:- 
கவிதையின் காதலன்
தலைப்பு:-
தெய்வதிருமகளே(மகனே) 

ஆணும் அவளே...
பெண்ணும் அவளே... 
அர்த்தநாரீஸ்வரரின் மறு உருவம் கொண்ட தெய்வத்திருமகளே... 

ஆண் பாதியே  பெண் பாதியே பூத்தபடி வலம் வந்திடும் முழுமதியே...

உன் அலங்காரத்தில் பொற் சிலையும் தோற்று போகுமே... 

பொற்சிலையே   உனக்குள்ளே  உயிர் கலந்த  உணர்வுகள்  இருப்பதை  மறந்து விலைபேச படுகிறாயோ ஓர் இரவுக்கு...
 
தினமும் இரவில் பௌர்ணமியாக வலம் வருகிறாய் சில பேருந்து நிலையங்களிலும்.... 

ஓரே இரவிலே  தேய்ந்து கரைந்திடும்  அம்மாவாசையாக   நீயே ஆகிறாய்.... 

உழைத்து வாழ நினைக்கும் உனக்கு இங்கே பல இடங்களில்  வாய்ப்புகளும் கிடைப்பது  இல்லை... 

வாழ்க்கையில் நீ கண்ட பருவ மாற்றமும் அதுவே  வலிகளாக உருமாற்றமும் அடைந்தது  ஏனோ.... 

உடலில் ஆணாக இருந்து உணர்வில் பெண்ணாக மாற்றம் கண்டாயோ  ...

தனிமையின் நேரத்தில் வீட்டில் மஞ்சள் பூசிக்கொண்டு...
மஞ்சத்தோடு  மல்லிகை சூடிக்கொண்டு ... 
உள்ளாடைகளும்  இங்கே உணர்வுகளுக்கும் தேவைப்பட்டதே... 

இவர்களின் வாழ்க்கையும் பாலினங்களுக்கு இடையே பாவப்பட்டதே... 

பல அவமானங்கள் கடந்து "திருநங்கை"  என்று ஆன வரலாறு இது என்றால்... 

படித்து சக மனிதர்களை போல காவல் துறையில் சாதிப்பதும்... 

சரித்திரத்தில்  மூன்றாம் பால் இனத்தவர்களுக்கு வெற்றி சுவடுகள் பதிப்பதும் இவர்களின் வாழ்க்கைக்கு முதல் படியே ... 

பிறக்கும் போது பெண்ணாக இருந்து உணர்வில் ஆணாக இருந்த "திருநம்பியே"... 

பருவம் வந்து பூப்படைந்த போது தானே  உணரப்பட்டது...

பெண்ணுக்கு உண்டான வெட்கம் வரவில்லை..
அந்த சடங்குகள் பிடிக்கவில்லை மாதம் மாதம் வரும் மாதவிடாய்  உணர்வுகளும்  வெறுக்கப்பட்டது...

அறுவைசிகிச்சையில் நான் நானாக மாறினேன் என் ஆண்மை உணர்வுக்கு உயிர் கொடுத்தபடி...

சமுகத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாதபடி...

உணர்வுகள் புரிந்த அந்த உயிருக்கும் உள்ளத்தை மட்டுமே  முழுவதுமாக புரிந்த  காதலியும் வந்தாள்  முழு வாழ்க்கை தெரிந்து...

அவள் குழந்தையாக அவனுக்கு அன்பும்  அரவணைப்பு தந்தாள்... 

 அவன் அவளை முழுமதியாக பார்த்து கொள்கிறான் ...
அங்கே காதல் மட்டுமே வாழ்ந்தது காமம் இல்லாமல்.... 

சமுகத்தில் மாற்றம் இருந்தால் சக மனிதர்களை போல எங்களுக்கும் மதிப்பு தந்திடுங்கள்... 

நாங்கள் பல இடங்களில் எங்கள் நிலைமையை மாற்றி சாதிக்க தொடங்கி விட்டோம்....

சிற்றுண்டி வைத்து கூட வாழ்க்கையில் மாற்றம் கண்டோம்...

வரவேற்பு தாருங்கள் வாழ்ந்திட நாங்கள் வழிகள் உருவாக்கி விட்டோம்...

நீங்கள் வழியை வலிகளாக மாற்றாமல் இருந்தாலே போதுமானது...
@⁨Kamu pillai Sis⁩ @⁨Sowbarnika Pratibha⁩

0 Comments