கூண்டுப் பறவை

முதலிடம்
அன்று நான் இந்த
கூண்டிற்க்குள்...


இன்று  நீ  இந்த 
கூண்டிற்க்குள்...


சுதந்திரமாக சிறகை விரித்து பறந்தேன்...


என்னைப் பிடித்து கூண்டினுள்
அடைத்தாய்...


இன்றோ என்
கூண்டினுள் நீ...


தொலைபேசி என்னும் மாயையில்
விழுந்தாய்...


கூண்டினுள் நீயே அகப் பட்டுக் கொண்டாய்...


நான் மனிதனாய்
நீ பறவையாய்...


உன்மனம் கெட்டு 
வாழும் வாழ்க்கை...


என் மனம் ஆனந்தமாய்
மகிழ்ச்சியாய்...


கவிஞர்
ர. ரமேஷ்
திருப்பூர்